Budget 2020: சுமார் 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் சுங்க வரி அதிகரிக்கக் கூடும்
நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்துவதற்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் 300-க்கும் மேற்பட்ட பொருட்களில் சுங்கவரி அதிகரிக்கக்கூடும் எனத் தகவல்.
புது டெல்லி: நாட்டின் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை மேம்படுத்துவதற்காக வரவிருக்கும் வரவுசெலவுத் திட்டத்தில் (Budget 2020) சுமார் 300 பொருட்களின் சுங்க வரியை (Custom Duty) அதிகரிப்பது குறித்து மத்திய அரசு பரிசீலிக்கலாம். இவற்றில் பொம்மைகள், தளபாடங்கள், காலணி, பூசப்பட்ட காகிதம், ரப்பர் உட்பட பல பொருட்கள் இருக்கலாம். மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம், உள்நாட்டுத் தொழிலுக்கு நிவாரணம் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குவதைத் தவிர, இறக்குமதியைக் குறைப்பதற்கும் வருவாயை அதிகரிப்பதற்கும் உதவியாக இருக்கும்.
தளபாடங்கள், ரசாயனங்கள், ரப்பர், பூசப்பட்ட காகிதம் மற்றும் காகித பலகைகள் உள்ளிட்ட பல துறைகளில் 300 க்கும் மேற்பட்ட பொருட்களின் அடிப்படை சுங்க வரிகளை பகுத்தாய்வு செய்ய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சகம் தனது பட்ஜெட் பரிந்துரைகளில் முன்மொழிந்துள்ளது.
காலணிகளுக்கு 35% சுங்க வரி விதிக்க பரிந்துரை:
பாதணிகள் மற்றும் அதன் தொடர்புடைய தயாரிப்புகளுக்கான சுங்க வரியை தற்போதைய 25% இலிருந்து 35% ஆக உயர்த்த அமைச்சகம் முன்மொழிந்துள்ளது, அதே நேரத்தில் ரப்பரின் புதிய நியூமேடிக் டயர்கள் மீதான கஸ்டம் வரி தற்போதைய 10-15% இலிருந்து 40% ஆக உயர்த்தப்படும் எனவும் பரிந்துரை.
மரச்சாமான்கள் (தளபாடங்கள்) மீது 30% வரி:
மர தளபாடங்கள் மீதான விருப்ப வரியை தற்போது 20% முதல் 30% ஆக உயர்த்த அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது. அதே நேரத்தில், பூசப்பட்ட காகிதம், காகித பலகைகள் மற்றும் கையால் செய்யப்பட்ட காகிதங்கள் மீதான வரியையும் இரட்டிப்பாக்கி 20% ஆக உயர்த்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
பொம்மைகளுக்கு 100% வரை சுங்க வரி:
மரம், உலோகம் மற்றும் பிளாஸ்டிக் பொம்மைகளின் வரியை தற்போதைய 20% இலிருந்து 100% ஆக உயர்த்த பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.