பட்ஜெட் அமர்வுக்குப் பின் காங்., கட்சியின் தலைவரை CWC தேர்வு செய்யும்!
பட்ஜெட் அமர்வுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை காங்கிரஸ் செயற்குழு தேர்வு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது!
பட்ஜெட் அமர்வுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை காங்கிரஸ் செயற்குழு தேர்வு செய்யும் என தகவல் வெளியாகியுள்ளது!
டெல்லி: பாராளுமன்றத்தில் தற்போது நடைபெறும் பட்ஜெட் அமர்வுக்கு பின்னர் காங்கிரஸ் செயற்குழு அடுத்த வாரம் கூடி கட்சியின் புதிய தலைவரை முடிவு செய்யக்கூடும் என்று வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தகவல் தெரிவித்துள்ளது.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதற்கு தாமாக பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலக ராகுல் காந்தி முடிவு செய்தார். ஆனால் அவர் தனது ராஜினாமா முடிவை திரும்ப பெற வேண்டும் என மூத்த தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அவர்களின் வேண்டுகோளை, இதுவரை ராகுல் காந்தி ஏற்கவில்லை. காங்கிரஸ் தலைவராக தொடர ராகுல் காந்தி தொடர்ந்து மறுத்து வருகிறார்.
ராகுலின் முடிவை காங்கிரஸின் மூத்த தலைவர்கள் பலரும் ஏற்காத நிலையிலும் ராகுல் தனது முடிவில் விடாப்பிடியாக உள்ளார். இதற்கிடையில், அவரது சகோதரியும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வாத்ராவும் இது தொடர்பாக எந்த முடிவும் எடுப்பதைத் தவிர்த்துள்ளார்.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் தற்போதைய பட்ஜெட் அமர்வு முடிந்ததும் இந்த விவகாரம் குறித்து முடிவு செய்ய காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை கூட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவரின் கூற்றுப்படி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் CWC கூட்டம் நடைபெறவிருந்தது. ஆனால், பட்ஜெட் அமர்வு ஒரு வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளதால், அது பட்ஜெட் அமர்வு பின்னர் நடைபெறும். சுவாரஸ்யமாக, வரவிருக்கும் CWC கூட்டத்தில் ராகுல் காந்தி கலந்து கொள்வார். ஆனால், அவர் கட்சித்தலைவரை தேர்ந்தெடுப்பதில் பங்கேற்க மாட்டார்.
மேலும், கட்சியின் புதிய தலைவரை தேர்ந்தெடுப்பதில் ராகுல் காந்தியின் சகோதரி பிரியங்கா காந்தி கூட பங்கேற்க மாட்டார் என்று கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். 2019 மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, மே 25 அன்று நடைபெற்ற CWC கூட்டத்தின் போது ராகுல் காந்தி தனது பதவியில் இருந்து விலக முன்வந்தார். இருப்பினும், அவரது கோரிக்கையை CWC திட்டவட்டமாக நிராகரித்தது. இது கட்சியில் கட்டமைப்பு மாற்றங்களைச் செய்ய அவருக்கு அதிகாரங்களை வழங்கியது.
பின்னர் ராகுல் காந்தி தனது ராஜினாமா கடிதத்தை ட்விட்டரில் ட்வீட் செய்துள்ளார், அதில் அவர் தனது கட்சிக்கு சேவை செய்வது அவருக்கு கிடைத்த மரியாதை என்று கூறினார்.