அதிதீவிர புயலாக மாறியுள்ள "டிட்லி" புயல் ஒடிசா - ஆந்திரா இடையே கரையை கடந்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு தென்  கிழக்கே 510 கிமீ தொலைவிலும், ஆந்திர மாநிலம் கலிக்கப்பட்டினத்துக்கு 460 கிமீ  கிழக்கு மற்றும் தென்கிழக்கேயும் வங்கக் கடலில் ‘டிட்லி’ புயல் மையம் கொண்டது. இந்த "டிட்லி" புயல் இன்று தெற்கு ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திரா இடையே கரையை கடக்கும் என்றும், பிறகு வடகிழக்கு திசையில் திரும்பி ஒடிசா  கடலோரமாக  மேற்கு வங்க கடல் பகுதிக்கு சென்று வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. 


இந்நிலையில் இந்த புயல் இன்று அதிகாலை 5.30 மணிக்கு ஒரிசா மாநிலத்தின் கோபால்பூருக்கும் ஆந்திர மாநில கலிங்கப்பட்டினத்துக்கும் இடையில் கரையை கடந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 



 


 



 


 



 


 


இதனால் ஒரிசா மாநிலத்தில் கடும் மழை பெய்து வருகிறது. மாநிலம் முழுவதும் மின்சார கம்பங்களும், மரங்களும் முறிந்து விழுந்துளன. ஒரிசாவின் கடலோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 3 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். மொத்தம் 836 முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.


"டிட்லி" புயல் காரணத்தால் ஒரிசா மாநிலத்தில் இன்றும் நாளையும் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட பல இடங்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புயலில் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 1000 தேசிய பேரிடர் மீட்புப் படையினரை மத்திய அரசு அனுப்பி இருக்கிறது.