புதுடெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைப்பெற்ற ராணுவ கொள்முதல் குழு கூட்டத்தில் ரூ.3000 கோடி அளவிற்கு போர் கருவிகளை வாங்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய ராணுவத்திற்கு போர் கருவிகளை கொள்முதல் செய்வதற்காக மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இன்று ராணுவ கொள்முதல் குழு கூட்டம் நடைப்பெற்றது.



இக்கூட்டத்தில், இந்திய கப்பற்படையிலுள்ள 2 கப்பல்களுக்காக பிரம்மோஸ் ஏவுகணைகள் வாங்குவது மற்றும் இந்திய ராணுவத்தின் அர்ஜுன் பீரங்கிக்கான மீட்பு வாகனங்களை வாங்குவது உள்ளிட்ட ஆயுதங்களை வாங்குவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.


இந்த பிரம்மோஸ் ஏவுகணைகள் உள்நாட்டிலேயே பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் (DRDO) வடிவமைக்கப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டு BEML-ஆல் உற்பத்தி செய்யப்படுபவை. கப்பல்களில் முதன்மை ஆயுதங்களாக இவை சேர்க்கப்படும்.


இவை போர் காலங்களில் மிக திறமையுடன் மற்றும் வேகமுடன் சேதமடைந்த பீரங்கிகளை சரிசெய்வது மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


முன்னதாக கடந்த செப்டம்பர் மாதம் சுமார் 9,100 கோடி ரூபாய் மதிப்புள்ள பாதுகாப்பு உபகரணங்களை கொள்முதல் செய்ய DAC ஒப்புக்கொண்டது. இந்த ஒப்புதல் மூலம் 'Buy (Indian)' பிரிவின் கீழ் ஆகாஷ் ஏவுகணை சிஸ்டம்ஸ் இரண்டு கொள்முதல் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.