நீட் தேர்வுக்கான தேதி: சிபிஎஸ்இ அறிவிப்பு வெளியீடு!
மருத்துவ படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வு மே.6-ஆம் தேதி நடைபெறும் என சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் எனப்படும் தேசிய தகுதிகாண தேர்வு மே 6ம் தேதி நடைபெறும் என்று சிபிஎஸ் இ அறிவித்துள்ளது. 2018ம் ஆண்டுக்கான நீட் தேர்வு மே மாதம் 6ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மருத்துவ படிப்பில் சேர்வதற்காக தேசிய அளவில் நீட் என்ற பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
ஆனால், தேசிய அளவில் நடத்தப்படும் மருத்துவ நுழைவுத்தேர்வான நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பதில்லை என்பதில் உறுதியாக உள்ளதோடு விலக்கு அளிக்க முடியாது என வெளிப்படையாக தெரிவித்தும் விட்டது.
இதையடுத்து கடந்த முறையை போல தமிழக மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதற்காக மாணவர்களுக்கு அரசு சார்பில் நீட் தேர்விற்கு பயிற்சியளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
நீட் தேர்வில் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும். அதேபோல் ஆங்கிலம் மற்றும் உள்ளூர் மொழியில் நீட் தேர்வு வினாத்தாள் கொடுக்கப்படும். நீட் தேர்வு வினாத்தாளில் ஆங்கிலம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 180 கேள்விகள் மட்டுமே இடம்பெறும் என உச்சநீதிமன்றத்தில் சி.பி.எஸ்.இ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வரும் மே 6 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் தேர்வுக்கு இன்று முதல் மார்ச் 9ம் தேதி வரை ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.
பொதுப்பிரிவினருக்கான தேர்வு கட்டணம் ரூ.1,400 ஆகவும், எஸ்.சி., எஸ்டிக்கு ரூ.750 ஆகவும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிபிடத்தக்கது.