அன்புள்ள வாழ்க்கையே மதிப்பெண் மட்டும் போதுமா? தயாசங்கர் மிஸ்ரா எழுப்பும் கேள்வி
யாருடைய மதிப்பெண் அதிகமோ, அவர்களுக்கு வரவேற்க சமுதாயம் காத்திருக்கிறது. ஆனால் கீழே கூறப்படும் செய்தி இவர்களுக்கானது இல்லை.
டியர் வாழ்க்கை / அன்புள்ள வாழ்க்கை: யாருடைய மதிப்பெண் குறைவாக இருக்கிறதோ, அவர்களிடமே எதிர்பார்ப்புகள் இருக்கும்...
இந்த செய்தி இவர்களுக்கானது, யார் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்து, தான் தோற்றுவிட்டேன் என நினைத்து மனகஷ்டத்தில் உடைந்து போகிறார்களுக்கானது...
மொபைல், ஃபேஸ்புக் மற்றும் செய்தித்தாள் போன்ற சாதனங்களில் அதிக மதிப்பெண் எடுத்தவர்களை பாராட்டு, வாழ்த்துக்கள் என செய்திகள் பகிரப்படுகிறது. ஒரு கட்டத்தில் இந்த வாழ்த்துகள் அவர்களுக்கு பெரும் சுமையாக மாறி விடுகிறது. எப்படி என்றால், அதிக மதிப்பெண் எடுத்தவர்களை பார்த்து, அனைவரும் கேட்பது.., அடுத்து என்ன? ஐஐடி, என்ஜீனிரிங் அல்லது டாக்டரா என்பது மட்டுமே. இப்படி கேட்பது அவர்களுக்கு எந்த வகையிலாவது பாதிக்கிறதா என சிந்திப்பது உண்டா?
இரண்டாவது அதிக மதிப்பெண் எடுத்தவரை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டும் இந்த சமுதாயம், மதிப்பெண் குறைவாக எடுத்தவரிகளின் மனநிலையை பற்றி யோசித்தது உண்டா. அதிக மதிப்பெண் எடுத்தவரை கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை, அதேவேளையில் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் பற்றியும் கவனம் கொள்ள வேண்டும் என்பதே உண்மை.
இந்தியாவில் மட்டுமில்லை, உலக முழுவதும் வரலாறு, அறிவியல், ஆராய்ச்சி, அரசியல், கலை மற்றும் சினிமா போன்ற துறைகளில் குறைவாக மதிப்பெண் எடுத்தவர்கள் சாதனை படைத்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உண்டு.
பத்திரிகையாளரான தோழர் பியுஷ் பாபெலே மிகவும் அழகாக எழுதி இருக்கிறார். அதில் "சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வந்தது. பலர் அதிக மதிப்பெண்கள் எடுத்துள்ளனர். அதே சமயத்தில், பல மாணவர்கள் தாங்கள் எதிர்பார்த்த மதிப்பெண்களைவிட குறைவான மதிப்பெண் எடுத்துள்ளனர். ஆனால் கடந்த 70 ஆண்டுகளில் டாப்ர்ஸ் எனக் கொண்டாடப்படுவர்கள் நாட்டிற்காக என்னா செய்தார்கள் என்று யாருக்குமே எதுவுமே தெரியாது. ஆனால் டாப்ர்ஸ் தங்களுக்காக நிறைய செய்துக் கொண்டார்கள் என்பது எனக்கு நன்றாக தெரியும். எனவே தான் மதிப்பெண் குறைவாக எடுத்தவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்கள் மீது நாடு மற்றும் சமுதாயம் பல நம்பிக்கைகள் வைத்துள்ள" என கூறியுள்ளார்.
குறைவான மதிப்பெண்களைப் பெறும் ஒரு மாணவரின் திறன் குறைவு, அதிகம் பெறுபவர் புத்திசாலி என்று அர்த்தம் கிடையாது. இதுதான் யதார்த்த உண்மை என்பதை அனைவரும் புரிந்துக் கொள்ள வேண்டும். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் மதிப்பெண்களை வைத்து ஒருவரின் அறிவுத் திறனுக்கான அளவுகோலை மதிப்பிடுவது வேதனைக்குரிய விசியம் ஆகும்.
தேர்வில் குறைவான மதிப்பெண் எடுத்தவர்களோ அல்லது தோல்வியடைந்தவர்களோ வீட்டை விட்டு வெளியில் வருவதற்கும், மற்றவர்களுடன் சகசமாக பேசுவதற்கும் பயப்படுவார்கள். அவர்களது மனம் இனம் புரியாத சோகத்தில் ஆழ்ந்து கிடக்கும். இதற்க்கு காரணம் சமுதாயம் மட்டுமில்லை, பெற்றோர்களும், ஆசிரியர்களும் தான்.
குறைவான மதிப்பெண் எடுத்த பிள்ளைகளை பார்த்து பெற்றோர்கள், என்னடா மார்க் வாங்கியிருக்க, பக்கத்து வீட்டுக்கார பையனை பார் டா, எவ்வளவு அதிக மதிப்பெண் எடுத்திருக்கிறான், நீயெல்லாம் எங்கள் பேரை கெடுக்கவே பொறந்திருக்கிங்க என வசைப்பாடுவதும், தேர்வு முடிவுகள் அறிவிப்புக்கு பின்பு பள்ளிக்கு செல்லும் போது முதல் நாளளே ஆசிரியர்கள் யார் எவ்வளவு மார்க் எடுத்திங்க சொல்லுங்க? எனக் கேட்பதும் எத்தனை வலிகளை அவர்கள் மனதில் உருவாகும் என்று கொஞ்சம் சிந்திக்க வேண்டும்.
மதிப்பெண்கள் என்பது வெறும் எண்ணிக்கையே மாணவரின் ஆற்றலை மதிப்பிடும் எண்கள் இல்லை. அனைவரும் திறமைசாலிகளே. ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கிறது. ஒருவருக்கு எழுவதில் திறமை இருக்கிறது என்றால் இன்னொருவர் நல்ல பாடகராக இருக்கலாம். வேறு ஒருவரின் பலம் அறிவியலாக இருக்கலாம். அவர் சிறந்த விஞ்ஞானியாக வரலாம். வாழ்நாளில் பொதுவாகவே தேர்வுகளில் சரியாகச் செய்யாத ஒருவருக்கு மனிதர்களைக் கையாள்வதில் திறமை இருக்கலாம். அவர் நல்ல விற்பனை அதிகாரியாக உருவெடுக்கலாம். அல்லது ஒரு நட்சத்திர விளையாட்டு வீரர் அவருக்குள் ஒளிந்திருக்கலாம்.
கல்வி என்பது நம் வாழ்க்கைக்கு அவசியம் தான், அதில் மாற்றுக்கருத்து என்பது இல்லை. அதேவேளையில் கல்வி என்பது நம்மை வழி நடத்தி தன்னம்பிக்கை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, நம்பிக்கையை உடைப்பதாக இருக்கக் கூடாது என்பதே நோக்கம்.
மாணவர்களே மதிப்பெண் குறைவென்றும், தேர்வில் தோல்வியுற்றனென்றும் சோர்ந்து துவண்டு போக வேண்டாம். உன்னை பற்றி உனக்கு மட்டுமே நன்றாக தெரியும். உனக்காக உன்னைத்தவிர யார் சிறப்பாக போராட முடியும்? போராடு... கற்றுக்கொடு....
(செய்தி: ஜீ நியூஸ் டிஜிட்டல் ஆசிரியர் - தயாசங்கர் மிஸ்ரா )
(https://twitter.com/dayashankarmi)
(உங்கள் கேள்விகளை மற்றும் பரிந்துரைகளை இன்பாக்ஸில் பகிரவும்: https://www.facebook.com/dayashankar.mishra.54