இந்திய தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட தேஜாஸ் போர் விமானத்தில் இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்  பறந்தார்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கார்நாடகா மாநிலம் பெங்களூரில், மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜாஸ் போர் விமானத்தில் ஏர் வைஸ் மார்ஷல் என்.திவாரியுடன்  விமானிகளுக்கான உடையில் பறந்தார். அரசு பொதுத்துறை நிறுவனமான HAL முற்றிலும் உள்நாட்டிலேயே, தேஜஸ் ரக போர் விமானங்களை தயாரித்து வருகிறது. இந்திய விமானப் படை ஏற்கனவே 40 தேஜஸ் ரக விமானங்களை வாங்குவதற்கு 'ஆர்டர்' கொடுத்துள்ளது. 


சமீபத்தில், 50 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான மேலும், 80 விமானங்களை வாங்கவும் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடற்படை பயன்பாட்டுக்காக தயாரிக்கப்பட்ட தேஜஸ் விமானத்தை வெற்றிகரமாக தரையிறக்கும் சோதனை முயற்சி சமீபத்தில் கோவாவில் நடந்தது. இந்த விமானம் மணிக்கு 2,205 கி.மீ., வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது. MiG-21 ரக விமானங்களுக்கு மாற்றாக இந்த விமானம் தயாரிக்கப்பட்டுள்ளது.



இதில் வெற்றி கிடைத்ததை அடுத்து, கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள HAL விமான நிலையத்தில் இருந்து ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தேஜஸ் விமானத்தில் பயணித்தார். இதன்மூலம், தேஜஸ் விமானத்தில் பயணிக்கும், நாட்டின், முதல் ராணுவ அமைச்சர் என்ற பெருமை, ராஜ்நாத் சிங்கிற்கு கிடைத்தது.