பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் (Rajnath singh), ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள புதன் அன்று ரஷியா செல்கிறார். கூட்டத்தில் பிராந்திய பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்வதோடு, ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் ஷெர்கி ஷோய்கு ( Sergey Shoigu) உடன் ஆலோசனை நடத்துவதோடு, பாதுகாப்பு கருவிகள் வாங்குவது தொடர்பான பல திட்டங்களை விரைவாக நிறைவேற்றுவது குறித்து மூத்த ராணுவ அதிகாரிகளுடன் ஆலோசனை செய்வார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் உறுப்பு நாடுகளாக உள்ள இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லையில் பதற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெறுகிறது.


சீன பாதுகாப்பு அமைச்சர் வீய் பெங்கேவும் (Wei Fenge)  இந்த மாநாட்டில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.


ஆனால், ராஜ்நாத் சிங்கும், வீய் பெங்கே இடையில் பேச்சு வார்த்தை நடத்துவது குறித்த எந்த திட்டமும் இல்லை.


முன்னதாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜூன் மாதம் 24ம் தேதி, ரஷியா இரண்டாம் உலகபோரில் நாசி ஜெர்மனியை வெற்றி கொண்ட 75வது ஆண்டு விழாவில் கலந்து கொள்ள மாஸ்கோ சென்றார்.


வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கும் ரஷ்யா அழைப்பு விடுத்துள்ளது, அவர் செப்டெம்பர் மாதம் 10ம் தேதி நடைபெற உள்ள வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் கலந்து கொள்வார். 


ஆகஸ்ட் 29-30ம் தேதிகளின் இடைப்பட்ட இரவில் லடாக்கில் (Ladakh) எல்ஏசி (LAC)பகுதிக்கு, அதாவது லைன் ஆஃப் ஆக்சுவல் கண்ட்ரோல் அருகில் பாங்காங்கில் இந்திய மற்றும் சீன துருப்புக்களுக்கு இடையே புதிதாக மோதல்கள் வெடித்தன


இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து, சீனாவின் சதியை முறியடித்தது. 


மேலும் படிக்க | லடாக்கில் பாங்காங் திசோ ஏரியை இந்திய படை கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தது எப்படி..!!!