உச்சநீதிமன்ற உத்தரவு மீறி பட்டாசு வெடித்த டெல்லி வாசிகள்..! ஆபத்தான நிலையில் காற்றின் மாசு.....


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் பட்டாசு வெடிப்பது தொடர்பான உச்சநீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், காற்றின் தரம் ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. 


காற்றின் தரக்குறியீடு அளவு 50 வரை இருந்தால் நன்று எனவும், 100 வரை இருந்தால் திருப்திகரமானது எனவும், 200 வரை இருந்தால் மிதமானது எனவும், 300 வரை இருந்தால் மோசம் எனவும், 400 வரை இருந்தால் மிகமோசம் எனவும், 401-க்கு மேல் இருந்தால் கடுமையானது எனவும் வரையறுக்கப்பட்டுள்ளது. கனஅளவு பிஎம் 2.5 மற்றும் பிஎம்10 என குறிக்கப்படும் மிகநுண்ணிய துகள்கள் சுவாசத்தின் வழியாக உள்ளே சென்று ரத்தத்தில் கலந்துவிடும் நிலையை மோசம், மிகமோசம் என்ற அளவுகள் குறிக்கின்றன.



இந்த நிலை டெல்லியில் நேற்று மாலை 8 மணிக்குப் பிறகு அதிகரித்துள்ளது. காற்றின் தரக்குறியீடு மாலை 7 மணிக்கு 281 ஆகவும், 8 மணிக்கு 291 ஆகவும், 10 மணிக்கு 296ஆகவும், சராசரியாக நேற்றிரவு 11 மணியளவில் 302 ஆகவும் சரிந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இன்று காலை அளவீட்டின்போது காற்றின் தரன் ஆபத்தான நிலையில் இருப்பதைக் குறிக்கும் 999 என்ற அளவை தரக்குறியீடு பல பகுதிகளில் எட்டியுள்ளது. 



தீபாவளியன்று டெல்லியில் இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்கலாம் என்றும், அதிலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத பசுமைப் பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கட்டுப்பாடு விதித்திருந்தது. டெல்லியில் நேற்று இந்த கட்டுப்பாடுகள் மீறப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.