புதுடெல்லி: கொரோனா தொற்று காரணமாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர் உயிர் இழந்தால், அக்குடும்பத்துக்கு ஆஆப் அரசாங்கம் நிதி உதவி அளிக்கும் என்ற மிகப்பெரிய அறிவிப்பை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெருந்தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் கல்வி மற்றும் வளர்ப்புக்கான செலவை அரசாங்கம் ஏற்கும் என டெல்லி முதல்வர் கூறியுள்ளார். 


மெய்நிகர் பத்திரிகையாளர் சந்திப்பில் உரையாற்றிய முதல்வர் கெஜ்ரிவால், கோவிட் -19 தொற்றின் ஒரு நாள் எண்ணிக்கை சுமார் 8,500 ஆகக் குறைந்துவிட்டது என்றும் நேர்மறை விகிதம் சுமார் 12 சதவீதமாகக் குறைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.



"ஆனால் கொரோனா வைரஸுக்கு (Coronavirus) எதிரான போராட்டம் முடிவடையவில்லை. ஆகையால் மெத்தனத்திற்கு இடமில்லை" என்று முதல்வர் ஆன்லைன் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார். "பெற்றோர் இருவரையும் தொற்றுக்கு இழந்துவிட்ட பல குழந்தைகளை நான் அறிவேன். உங்களுக்காக நான் இன்னும் இருக்கிறேன் என்று அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். உங்களை நீங்கள் அனாதையாக கருத வேண்டாம். அத்தகைய குழந்தைகளின் படிப்பு மற்றும் வளர்ப்பை அரசாங்கம் கவனித்துக்கொள்ளும்" என்று கெஜ்ரிவால் (Arvind Kejriwal) கூறினார்.


"தங்கள் குழந்தைகளை இழந்த வயதானவர்களைப் பற்றியும் நான் நான் அறிவேன். இறந்தவர்களின் சம்பாத்தியத்தை நம்பி தான் இந்த குடும்பங்கள் இருந்துள்ளன. உங்களுடைய மகன் (கெஜ்ரிவால்) இன்னும் உயிரோடு இருக்கிறேன் என நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன். சம்பாதிக்கும் குடும்ப உறுப்பினர்களை இழந்த இதுபோன்ற அனைத்து குடும்பங்களுக்கும் அரசாங்கம் உதவும்" என்று முதல்வர் கூறினார் .


ALSO READ: 2 மாதங்களுக்கு இலவச ரேஷன்-டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்: Lockdown நீடிக்குமா?


கடந்த 10 நாட்களில் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு தேவையான சுமார் 3,000 படுக்கைகள் கிடைத்துள்ளன. இருப்பினும், ஐ.சி.யூ படுக்கைகள் கிட்டத்தட்ட நிரம்பிதான் உள்ளன என்று கெஜ்ரிவால் கூறினார்.


“நாங்கள் இந்த திசையில் செயல்பட்டு வருகிறோம். மேலும் 1,200 ஐ.சி.யூ படுக்கைகள் தயாரிக்கப்படுகின்றன. மேலும் ஆக்ஸிஜன் (Oxygen) படுக்கைகள் சேர்க்கப்பட்டுகின்றன. ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் வாங்கப்படுகின்றன,” என்றார் டெல்லி முதல்வர்.


"நாம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை பூஜ்ஜியத்துக்கு கொண்டு வர வேண்டும். அதுவரை நம்மால் நிம்மதியாக இருக்க முடியாது. லாக்டவுனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்" என்று முதல்வர் கூறினார்.


தேசிய தலைநகரில் வியாழக்கிழமை 10,489 பேர் புதிதாக தொற்றால் பாதிக்கப்பட்டனர், 308 பேர் இறந்தனர். நேர்மறை விகிதம் 14.24 சதவீதமாக உள்ளது என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.


ALSO READ: கொரோனா மூன்றாவது அலைக்கு தயாராகி வருகிறோம், அதிக தடுப்பூசிகள் தேவை: டெல்லி முதல்வர்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR