INX Media case: சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி!
ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைககு அனுமதி!!
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரத்தை 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைககு அனுமதி!!
ஐஎன்எக்ஸ் நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெறுவதில் முறைகேடு நடந்ததாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் புகார் உள்ளது. இதில் வெளிநாட்டு முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் அனுமதி வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சிபிஐ சார்பாக கடந்த ஆகஸ்ட் மாதம் 21 ஆம் தேதி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இரண்டும் தனி தனியாக வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த சிபிஐ வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ப. சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கினார்கள். ஆனால் உடனடியாக அமலாக்கத்துறை ப. சிதம்பரத்தை கைது செய்து விசாரித்தது. அமலாக்கத்துறை வழக்கில் தற்போது ப. சிதம்பரம் நீதிமன்ற காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
கடந்த ஒரு மாதமாக ப.சிதம்பரம் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வருகிறார். ஆனாலும் இவருக்கு ஜாமீன் வழங்க முடியாது என்று தொடர்ந்து டெல்லி ஹைகோர்ட் மறுத்து வருகிறது. கடைசியாக நவம்பர் 14 ஆம் தேதி இந்த வழக்கில் டெல்லி ஹைகோர்ட் ஜாமீன் வழங்க மறுத்தது. டெல்லி ஹைகோர்ட் நீதிபதி சுரேஷ் கெய்த் இந்த தீர்ப்பை வழங்கினார். இதற்கு எதிராக ப. சிதம்பரம் தரப்பு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில் ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை நடக்க உள்ளது.
இந்நிலையில், வரும் 22,23 ஆகிய தேதிகளில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்று திகார் சிறையில் அமலாக்கத்துறை ப.சிதம்பரத்திடம் இரண்டு நாள் விசாரிக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழக்கியுள்ளது.