கிழக்கு டெல்லி, 5 வயது சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் இருவர் குற்றவாளிகள் என டெல்லி கர்கர்தோமா நீதிமன்றம் தெரிவித்துள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ய முயன்றதாக கைது செய்யப்பட்ட வழக்கில் டெல்லியை சேர்ந்த இருவர் குற்றவாளி என டெல்லி கர்கர்தோமா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இவர்களுக்கான தண்டனை வரும் ஜனவரி 30 அன்று அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஏழு ஆண்டுகளுக்கு முன்பு, ஏப்ரல் 15, 2013 அன்று, கிழக்கு டெல்லியின் காந்தி நகரில் ஐந்து வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக, சிறுமியின் அண்டை வீட்டார் இருவர் கைது செய்யப்பட்டனர். மேலும் கைது செய்யப்பட்டவர்கள் சிறுமியின் தனிப்பட்ட இடத்தில் உலோக பொருட்களை புகுத்தி கொலை செய்ய முயற்சித்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.


இந்த கோர சம்பவத்திற்கு பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி மிகவும் ஆபத்தான நிலையில் டெல்லி AIIMS மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சம்பவத்தினை அடுத்து இரண்டு நாட்கள் கழித்து வெளிச்சத்திற்கு வந்த இந்த குற்றச்சம்பவம் தொடர்பாக ப்ரதீப் மற்றும் மனோஜ் என்னும் இருவர் கைது செய்யப்பட்டனர். கைது பின்னர் நடைப்பெற்ற விசாரணையில் அவர்களது குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டன.


POCSO சட்ட பிரிவின் கீழும், கொலை முயற்சி பிரிவிலும் இவர்கள் இருவர் மீது டெல்லி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்நிலையில் தற்போது இந்த வழக்கு உச்சக்கட்டத்தினை எட்டியுள்ளது.


இந்த வழக்கினை விசாரித்த டெல்லி கர்கர்தோமா நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என அறிவித்துள்ளது. மேலும் இவர்கள் இருவருக்குமான தீர்ப்பு வரும் ஜனவரி 30-ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.