மதுபானங்களுக்கான `கோவிட் -19 வரி` ரத்தாகுமா? டெல்லி அரசு விளக்கம்
டெல்லி அரசு சார்பில் மதுபானம் விற்பனை கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநிலத்திற்கு உள்ளது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்தது.
புது டெல்லி: மே 15 அன்று, தில்லி உயர்நீதிமன்றத்தில், மதுபானத்தின் மீது சிறப்பு கொரோனா தொற்று கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து வக்கீல் வருண் தியாகி மற்றும் வழக்கறிஞர் பாரத் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனு தொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.
இந்த நோட்டீஸை அடுத்தது, டெல்லி அரசு சார்பில் மதுபானம் விற்பனை கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநிலத்திற்கு உள்ளது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் மேல்முறையீடு செய்தது.
அதிகபட்ச சில்லறை விலை (MRP) உயர்த்தப்படவில்லை என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் கூறி டெல்லி அரசு பதிலித்துள்ளது.
அசாம், மேகாலயா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, யு.பி., ஹரியானா, ராஜஸ்தான், தமிழ்நாடு, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களின் உதாரணங்களை மேற்கோள் காட்டி, இந்த மாநிலங்கள் இதே போன்ற கட்டணங்களை விதித்துள்ளதாக தில்லி அரசு கூறியது.
“குடிமக்களுக்கு மதுபான வர்த்தகம், வணிகம் மற்றும் மதுபானம் உட்கொள்வதர்கான அடிப்படை உரிமை இல்லை. அதே நேரத்தில் இவற்றை ஒழுங்குபடுத்த மாநிலத்திற்கு உரிமை உண்டு என்று டெல்லி அரசு குறிப்பிட்டுள்ளது.
" ஒருமாநில கலால் வரி சுமத்தப்படும் முக்கிய பொருள் மதுபானமாகும். இது மற்ற பொருள்களைப்போல அல்லாமல், ஆபத்தானது மற்றும் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் பொருள் ஆகும். எனவே இது மற்ற பொருட்களை போன்ற வர்த்தக பொருளாக கருத முடியாது" என்று தில்லி அரசு தனது பதிலில் தெரிவித்துள்ளது.
2009 டெல்லி கலால் சட்டத்தின் கீழ், டெல்லியின் தேசிய தலைநகர் பிராந்தியத்தில், குறிப்பாக தற்போதைய கோவிட் தொற்று சூழ்நிலையில், மதுபானம் விற்பனை, கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை ஒழுங்குபடுத்தவோ அல்லது மேற்பார்வையிடவோ மாநிலத்திற்கு அதிகாரம் உள்ளது.
"பிரிவு 4, பிரிவு 11 (1) மற்றும் பிரிவு 77 (பிரிவு 81 (1) மற்றும் / பிரிவு 81 (2) (எஃப்) / எல்ஜி பிரிவு 77 இன் கீழ் வழங்கப்பட்டஅதிகாரத்தைப் பயன்படுத்துவதிலும், அந்த விதி 154 (4) விதிகளில் திருத்தம் செய்யப்பட்டு, வரி விதிக்கப்பட்டுள்ளது. இது சலுகை விலை மற்றும் ஒழுங்குமுறை / மேற்பார்வை செலவு ஆகியவற்றின் கலவையைத் தவிர வேறொன்றுமில்லை" என்று பதில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக மே 15 அன்று, வக்கீல் வருண் தியாகி மற்றும் வழக்கறிஞர் பாரத் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுதொடர்பாக டெல்லி உயர் நீதிமன்றம் டெல்லி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்ததுடன், இந்த மனு குறித்துதில்லி அரசிடம் பதில் தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.
தாக்கல் செய்த மனுவில் பிரதான சட்டம், அதாவது தில்லி கலால் சட்டத்தின் 26 வது பிரிவின் கீழ்கொடுக்கப்பட்ட விஷயங்களை தவிரவேறு எந்த கட்டணங்களையும் வசூலிக்க மாநிலத்திற்கு அதிகாரம் அளிக்காது என மனுவில் கூறப்பட்டுள்ளது. அத்தகைய கட்டணம் அரசாங்கத்தால் விதிக்கப்படுவது இந்திய அரசியலமைப்பின் 265 வது பிரிவை மீறுவதாக உள்ளது என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும், மனுவில் 2010 ஆம் ஆண்டில் கலால் விதிகள் திருத்தப்பட்ட அறிவிப்பை ரத்து செய்யுமாறு தில்லி அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும் மதுபானத்திற்கு சிறப்பு கொரோனா கட்டணமாக வசூலிக்கப்பட்ட பணத்தை திருப்பித் தருமாறு தில்லி அரசுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டது.
மற்றொரும னுவை லலித் வலேச்சா தாக்கல் செய்தார். அதில் அவர் மதுபான கட்டண அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என்றார். அவர்தனது மனுவில், விலை அதிகரிப்பு சட்டத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டியுள்ளார்.
(செய்தி: ஹேமலதா.எஸ்)