இந்தியா முழுவதும் இரண்டாம் அலை காரணமாகக் கடந்த சில வாரங்களாகவே வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக,  2,11,298 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து மொத்த தொற்று பாதிப்புகள் 2,73,69,093 ஆக அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவை (Coronavirus) கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகம் இருந்த தலைநகர் டெல்லியில் (Delhi) தற்போது கொரோனா பாதிப்பு மெல்லமெல்ல குறைந்து உள்ளது. 


ALSO READ | சற்றே வேகம் தணியும் கொரோனா: கடந்த 24 மணி நேரத்தில் 2,11,298 புதிய தொற்று பாதிப்பு


இதற்கிடையில் டெல்லியில், ஆக்சிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) காரணமாக இறந்த கொரோனா நோயாளிகளின் குடும்பங்களுக்கு இழப்பீட்டுத் தொகையை டெல்லி அரசு அறிவித்துள்ளது. அதன் படி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறந்த கொரோனா நோயாளிகள் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க டெல்லி அரசு உத்தரவிட்டு உள்ளது. டெல்லி அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு, நோயாளிகள் மரணம் மற்றும் மரணத்திற்கான காரணங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த தொகை வழங்கப்படும்.


முன்னதாக கொரோனா தொற்று காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூபாய் 50,000 இழப்பீட்டுத் தொகையாக வழக்கப்படும் என டெல்லி அரசு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR