டெல்லிக்கு மற்றொரு கெட்ட செய்தி. இந்த முறை டெல்லியில் தேங்கியிருக்கும் மாசுபாடு காரணமாக வந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் நிலவும் அளவுக்கு அதிகமான காற்று மாசுக்கு பின்னர் தற்போது தண்ணீருக்கான மாதிரிகள் கூட அவற்றின் தரத்தில் முழுமையானவை என்று நிரூபிக்கவில்லை. டெல்லியின் நீரின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்றுள்ள அதே நேரத்தில் மும்பையின் நீர் மாதிரி சிறந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இத்தகவலை தற்போது மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் வெளியிட்டுள்ளார். மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முன்னதாக டெல்லி அரசாங்கத்தின் மீது நீரின் தரம் குறித்து கேள்விகளை எழுப்பியதை நாம் தற்போது நினைவில் கூறலாம். அதற்கு பதிலளிக்கும் விதமாக டெல்லி முதல்வர் அதை அரசியல் சாடல் என விமர்சித்துள்ளார்.
 
ஊடக அறிக்கையின்படி, டெல்லியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் நுரையுடன் பொங்கி வருகிறது. டெல்லி நீர் குறித்து மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் முன்பு ஒரு அறிக்கையை அளித்திருந்தார். இதன் பின்னர், கெஜ்ரிவால் அரசாங்கமும் நீர் வாரியமும் அவரது கூற்றை நிராகரித்தன. மேலும் டெல்லியில் நீர் தர சோதனைகள் தவறாமல் செய்யப்படுகின்றன என்றும், டெல்லியில் உள்ள தண்ணீர் குடிக்க உகந்தது எனவும் தெரிவித்தன.


மேலும் தனது அறிக்கையில், நீர் தர சோதனைக்கு 21 ஆய்வகங்கள் உள்ளன என்று நீர் வாரியத்தின் துணைத் தலைவர் தினேஷ் மோகானியா தெரிவித்துள்ளார். இந்த ஆய்வகங்களில் தண்ணீர் தொடர்ந்து சோதிக்கப்படுகின்றன எனவும் தெரிவித்துள்ளது.


மேலும் நீர் மாதிரிகளில் ஏதேனும் சிக்கல் காணப்பட்டால், அதைச் சரிபார்த்து பிரச்சினை தீர்க்கப்பட்டு வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளது. சுத்திகரிப்பு நிலையங்களில் 24 மணிநேர நீரின் தரம் கண்காணிக்கப்படுகிறது என்று நீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும் டெல்லியில் எடுக்கப்பட்ட மாதிரிகளில் அசுத்தமான நீரின் சிக்கல் மாதிரியின் ஒன்று முதல் இரண்டு சதவீதம் வரை மட்டுமே காணப்படுகிறது. செப்டம்பர் 20 முதல் 23 வரை மொத்தம் 570 நீர் மாதிரிகளை நீர் வாரியம் சேகரித்தது. இதில், 563 மாதிரிகளின் தரம் சிறப்பாக இருப்பது கண்டறியப்பட்டது எனவும் தெளிவுபடுத்தியுள்ளது.