புதுடெல்லி - மும்பை வழிசெல்லும் புதிய ராஜ்தானி ரயிலினை வரும் சனி அன்று ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் துவங்கி வைக்கின்றார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது துவங்கப்படவுள்ள நிஜாமுதின் - மும்பை ராஜ்தானி சேவையுடன், இருநகரங்களுக்கும் 3 ராஜ்தானி ரயில்கள் இயக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் குறிப்பிடப்பட்ட 3 ரயில்களில் இந்த ராஜ்தானி தான் மத்திய பகுதிகளை கவர்ந்து செல்லும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.


தற்போது துவங்கப்படவுள்ள, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ஆனது சத்திரபதி சிவாஜி மஹாராஜா டெர்மினல், கல்யாண், நாசிக், ஜோல்கான், கந்தாவா, ஜான்சி, ஆக்ரா என வட மாநிலங்களின் முக்கிய நகரங்களை தொட்டு செல்கிறது.


இந்த ரயில் ஆனது பிரதி வாரம் புதன் மற்றும் சனி கிழமைகளில் மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 2.30 மணிக்கு புறப்பட்டு டெல்லியின் ஹஜிரத் நிஜாமுதின் ரயில் நிலையத்தினை அடுத்த நாள் இரவு 10.20 மணியளவில் எட்டும்.


மருமுனையில் ஹஜிரத் நிஜாமுதின் ரயில் நிலையத்தில் இருந்து பிரதி வாரம் வியாழன் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மாலை 16.15 மணியளவில் புறப்பட்டு, மும்பை சத்திரபாதி சிவாஜி ரயில்வே நிலையத்தை அடுத்த நாள் 11.55-க்கு சென்றடையும்.


இந்த புதிய ராஜ்தானி ரயில் ஆனது ஒரு முதல் தர AC வகுப்பு, இரண்டு இரண்டாம் தர AC வகுப்பு, எட்டு மூன்றாம் தர AC வகுப்பு மற்றம் ஒரு உணவு பெட்டி பொருத்தப்பட்டுள்ளது.


தற்போது இவ்விரு நகரங்களுக்கு இடைய இரண்டு ராஜ்தானி ரயில் இயக்கத்ததில் உள்ளது. ஒன்று மும்பை சென்ட்ரல்-க்கும் மற்றொன்று பாந்தரா டெர்மினலுக்கும் செல்கிறது. இந்நிலையில் தற்போது சத்ரபதி சிவாஜி நிலையத்திற்கு செல்லும் வகையில் மூன்றாவது ராஜ்தானி இயக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.