தேசிய தலைநகரம் டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளான குருகிராம், நொய்டா, ஃபரிதாபாத் மற்றும் காசியாபாத்தில் இன்று காலை லேசான மழை பெய்து வருகிறது .


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி-என்.சி.ஆர் (Delhi-NCR) உட்பட வட இந்தியா முழுவதும் மீண்டும் கடுமையான குளிரை மக்கள் சந்திக்க நேரிட்டுள்ளது. ஜனவரி 9 முதல் 11 வரை குறைந்தபட்ச வெப்பநிலை 3-4 டிகிரி குறையக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 4 முதல் 5 டிகிரி வரை இருக்கும். ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் மற்றும் பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தின் சில பகுதிகளில் அடர்த்தியான மேகங்கள் காணப்பட்ட ஒரு செயற்கைக்கோள் படத்தை வானிலை ஆய்வு மையம் பகிர்ந்துள்ளது.


 சில நாட்களாக வட இந்தியா குளிரில் இருந்து நிவாரணம் பெற்றது. ஆனால் மிதமான மூடுபனி மட்டும் இருந்தது. இதன் காரணமாக டெல்லிக்கு வரும் ரயில்கள் 5 முதல் 6 மணி நேரம் தாமதமாக வந்து கொண்டிருந்தன. 


மறுபுறம், ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் காஷ்மீரில் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. லடாக் உட்பட காஷ்மீர் பள்ளத்தாக்கில் 2 முதல் 6 அங்குல பனிப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகளின் முகம் மலர்ந்தது. 


ஸ்ரீநகரில் இரவு வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே சென்றுவிட்டது. குல்மார்க் ஸ்கை-ரிசார்ட் பகுதியில் மைனஸ் 6.5 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவாகியுள்ளது. லடாக் உள்ள லேவில் பகுதியில் வெப்பநிலை மைனஸ் 18.3 டிகிரி ஆக குறைந்துள்ளது.


இந்நிலையில் இன்று அதிகாலை முதல் டெல்லி  சுற்றி பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இதனால் தேசிய தலைநகரம் டெல்லியில் குளிர் சற்று இன்னும் அதிகரித்துள்ளது. 


உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.