டெல்லி: பெட்ரோல் பங்குகள் இன்று ஸ்டிரைக்- டாக்சி, ஆட்டோ சேவை முடக்கம்!!
வாட் வரியை குறைக்க மறுக்கும் டெல்லி அரசின் முடிவை எதிர்த்து இன்று பெட்ரோல் பங்குகள் 24 மணிநேர வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது.
வாட் வரியை குறைக்க மறுக்கும் டெல்லி அரசின் முடிவை எதிர்த்து இன்று பெட்ரோல் பங்குகள் 24 மணிநேர வேலைநிறுத்தம் அறிவித்துள்ளது. இதனால் டாக்சி (ஓலா, உபர்), ஆட்டோ சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்துகொண்டே வரும் நிலையில் ஹரியானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட சில மாநில அரசுகள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைத்துள்ளன.
இதேபோல், டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையின அரசும் இந்த வாட் வரியை குறைக்க வேண்டும் என வலியுறுத்தி டெல்லி பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், இந்த கோரிக்கைக்கு டெல்லி அரசு எவ்வித பாரபட்சமும் காட்டவில்லை.
இந்நிலையில் வாட் வரியை டெல்லி அரசு குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி டெல்லியில் உள்ள சுமார் 400 பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் பங்குகள் 24 மணிநேர கதவடைப்பு போராட்டத்தில் குதித்துள்ளன. இதன் விளைவாக இன்று காலை 6 மணிமுதல் நாளை அதிகாலை 5 மணிவரை பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படாது. இதனால் டெல்லியில் இன்று கால் டாக்சி மற்றும் ஆட்டோ ரிக்ஷா சேவைகள் முடங்கியுள்ளது.
இதனால் டாக்சி (ஓலா, உபர்), ஆட்டோ சேவைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.