பேஸ்புக்கில் படம் திருடி, இளம்பெண்களை மிரட்டிய டெல்லி வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியை சேர்ந்த 34-வயது வாலிபர் ஆகாஷ் சௌத்ரி, சமூக வலைதளங்களில் இருக்கும் பெண்களின் புகைப்படங்களை திருடி அதனை மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடப்போவதாக கூறி சம்பந்தப்பட்ட பெண்களை மிரட்டியுள்ளார்.


இதுதொடர்பாக டெல்லி சைபர் கிரைம் காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட புகாரின் பேரில் ஆகாஷ் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட ஆகாஷ் 6 போலி பேஸ்புக் கணக்குகளை கொண்டிருப்பதாகவும், அதில் அறிமுக இல்லா நபர்களுடன் நண்பராக மாறி அவர்களின் புகைப்படங்களை திருடி இச்செயல்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார்.


இவ்வாறு பெண்களை மிரட்டுதல் மூலம் இவர் பல லட்சம் ரூபாய் பெற்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கொடுத்தப் புகாரின் பேரில் ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.


கைது செய்யப்பட்ட ஆகாஷ் B Com பட்டதாரி எனவும், தன் குடியிறுப்பு பகுதியில் அவர் கறி கடை நடத்தி வருவதாகவும் தெரிகிறது. 


இச்சம்பவம் குறித்து குருகிராம் காவல்துறை அதிகாரி சின்மாய் பிஷ்வால் தெரிவிக்கையில்,.. இன்ஸ்டாகிராம், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் தகவல்களை திருடியதாகவும், அதைக்கொண்டு பெண்களை மிரட்டியதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்!