டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து ப.சிதம்பரம் ட்விட்டரில் கண்டனம்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

புதுடெல்லி: டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டுக்கு ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் யாரும் இடைநீக்கம் செய்யப்படாதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ள அவர், கணிசமான போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ள இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.


டெல்லி ஜாமியா மிலியா துப்பாக்கி சூடு நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக் கழகத்தில் சிஏஏவிற்கு எதிராக அமைதியாக கடந்த சில மாதங்களாக போராட்டம் நடந்தது. இந்நிலையில், நேற்று இந்த போராட்டத்தில் ராம் பகத் கோபால் என்ற நபர் அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினார். இதில், கல்லூரி மாணவர் ஒருவர் காயமடைந்தார். இந்த துப்பாக்கி சூட்டிற்கு தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். 


இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பி.சிதம்பரம் டெல்லி ஜாமியா பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு குறித்து கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லி போலீஸ் கமிஷனர் அமுல்யா பட்நாயக்கின் ஜாமியா மில்லியா இஸ்லாமியா மாணவர் காயமடைந்தபோது பதவியில் நீட்டிக்கப்பட்டதை "புரிந்துகொள்ள முடியவில்லை" என்று குறிப்பிட்டுள்ளார்.


துப்பாக்கிச் சூடு சம்பவத்தை நிகழ்த்துவதற்காக துப்பாக்கியுடன் கோபால் ஆவேசத்துடன் ஓடி வந்த போது அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த ஏராளமான டெல்லி போலீசார் அமைதியாக வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். மாணவர்கள் உதவிக்கு அழைத்தும் துப்பாக்கியை காட்டி மிரட்டிக்கொண்டிருந்த கோபாலை போலீசார் தடுக்க முயற்சி செய்யவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொடர்ந்தே அந்தநபரை போலீசார் பிடித்துச் சென்றனர்.


துப்பாக்கி சூடு சம்பவமும், போலீசார் நடந்து கொண்ட விதமும் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவர் ப சிதம்பரம் இச்சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.



இது குறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்., "டெல்லியில் போலீசார் குவிக்கப்பட்ட இடத்திலேயே துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது. அன்றைய நாளிலேயே டெல்லி போலீஸ் கமிஷ்னருக்கு பதவி நீட்டிப்பு கிடைத்துள்ளது. புரிந்து கொள்ள முடியாது. கண்டிக்கத்தக்கது. ஒரு பக்கம் நீட்டிப்பு கிடைத்துள்ளது. மறுபக்கம் துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்காக யாரும் பணியிடை நீக்கம் செய்யப்படாதது ஏன்" என்று கேள்வி எழுப்பி உள்ளார்.