டெல்லி தேர்தல் `இந்தியா vs பாகிஸ்தான்` போன்றது - பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ரா மீது FIR
டெல்லி தேர்தலை `இந்தியா vs பாகிஸ்தான் போட்டி` என்று கூறிய பாஜக வேட்பாளர் கபில் மிஸ்ராவுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு.
புது டெல்லி: பாஜக சார்பில் டெல்லி தேர்தலில் போட்டியிடும், அக்கட்சியின் வேட்பாளர் கபில் மிஸ்ரா டெல்லி தேர்தலை "இந்தியா vs பாகிஸ்தான் போட்டி" என்று கூறி ட்வீட் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் பேரில் டெல்லி காவல்துறை கபிலுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக மாடல் டவுன் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை போலீசார் விசாரித்து வருகின்றனர். முன்னதாக, ட்வீட்டை நீக்க தேர்தல் ஆணையம் அவருக்கு உத்தரவிட்டது.
2017 ஆம் ஆண்டு வரை ஆம் ஆத்மி கட்சி அரசாங்கத்தில் டெல்லி நீர்வளத் துறை அமைச்சராக இருந்த கபில் மிஸ்ரா, இந்த முறை மாடல் டவுன் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவைத் தொடர்ந்து, கபில் மிஸ்ரா அக்பர் அலகாபாத்தின் புகழ்பெற்ற வரிகள் குறித்தும் விளக்கமளித்தார். அவர் கூறியது, 'அவர்கள் கொன்றாலும், எந்த விவாதமும் இல்லை.
ஷாஹீன் பாக் ஒரு "மினி பாகிஸ்தான்" என்றும், பிப்ரவரி 8 ஆம் தேதி நடக்கும் டெல்லி சட்டமன்றத் தேர்தல்கள் இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி போன்றது தான் கூறியது உண்மை என்றும், அது தான் சரி என்றும் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.
மாடல் டவுன் சட்டமன்றத் தொகுதியின் ரிட்டர்னிங் ஆபீசர் (ஆர்ஓ) பன்வாரி லால் வியாழக்கிழமை மிஸ்ராவுக்கு எழுதிய கடிதத்தில், “ஷாஹீன் பாக் குறித்த உங்கள் அறிக்கை மின்னணு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் பல செய்திகள் பரவி வருவதைக் காணலாம். இந்த நடவடிக்கைகள் நடத்தை விதிமுறை மற்றும் சட்டத்தை மீறுவதாக உள்ளது. அதுக்குறித்து பதிலளிக்குமாறு ஆர்.ஓ. கேட்டுக்கொண்டார்.
வியாழக்கிழமை, கபில் மிஸ்ரா, "பிப்ரவரி 8 அன்று டெல்லியில் நடைபெறும் தேர்தல் இந்தியா vs பாகிஸ்தான் போன்றது. அது மட்டுமல்லாமல், கபில் மிஸ்ரா ஷாஹீன் பாக் (CAA க்கு எதிராக பெண்கள் நடத்தி வரும் போராட்டம்) ‘ மினி பாகிஸ்தானுக்கு’ என்று கூறியுள்ளார். அதே நேரத்தில், வேறு சில பாஜக தலைவர்கள் ஷாஹீன் பாக் "ஷேம் பாக்" (பாகிஸ்தானை போன்றது) என்று அழைத்தனர்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.