தலைநகர் டெல்லியில் காற்று மாசு, இன்று மீண்டும் மோசமான நிலைக்குச் செல்லும், என மத்திய காற்றுத்தரம் மற்றும் தட்ப வெப்ப ஆய்வு அமைப்பு தகவல்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லி: தலைநகர் டெல்லியில் இன்று காலை காற்றின் தரக் குறியீடு (AQI) 218 ஆக மோசமான' நிலையில் காணப்படுகிறது. தலைநகர் டெல்லியில் (Delhi Air Pollution) நாளுக்கு நாள் காற்றின் மாசு அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. காற்று மிகவும் மோசமடைந்து ஆபத்து அளவை எட்டி இருக்கிறது. தற்போது டெல்லி (Delhi) மக்கள் காற்றை சுவாசிக்க முடியாமல் திணறி வருகின்றனர். உலகிலேயே காற்று மாசு அதிகமாக இருக்கும் நகரமாக டெல்லி உருவெடுத்துள்ளது. கடந்த சில தினங்களாக டெல்லியில் மாசு கலந்த பனிமூட்டம் நிலவி வருகிறது. இந்த நிலைமையை சமாளிக்க முடியாமல் அனைவரும் திணறும் நிலை உருவாகி உள்ளது. இதனால் சாலை விபத்துக்கள், ரயில் தாமதம், விமானங்கள் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது. 


இந்நிலையில், தேசிய தலைநகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காற்றின் தரம் திங்களன்று சற்று இயல்பு நிலைக்கு மாறியுள்ளது. காற்றின் தரக் குறியீடு (AQI) 'மோசமான' பிரிவை தாண்டியுள்ளது. அக்டோபர் மாத இறுதியில் இருந்து நகரம் கடுமையான காற்று மாசுபாட்டின் கீழ் உள்ளது. காலையில் டெல்லியில் உள்ள காற்றின் தரக் குறியீடு (AQI) 218 ​​ஆக உயர்ந்தது என்று மத்தியில் இயங்கும் காற்றின் தரம் மற்றும் வானிலை முன்னறிவிப்பு மற்றும் ஆராய்ச்சி அமைப்பு (SAFAR) தெரிவித்துள்ளது.


சாந்தினி சௌக்கில் காற்றின் தரம் 328 அக்காவும், ஐஐடி டெல்லி 266, விமான நிலையம் (T3) மற்றும் அயனகர் 245, மதுரா சாலை 235, லோதி சாலை 201, தில்லி பல்கலைக்கழகம் 191, பூர்பா 188 மற்றும் பூசா 182 . நொய்டாவில் உள்ள AQI 170 ஆகவும், குருகிராம் 279 ஆகவும் இருந்தது.


SAFAR இன் கூற்றுப்படி, வலுவான மேற்பரப்பு காற்றின் வேகம் அதிகரிக்கும் காற்றோட்டம் மூலம் AQI இன் மேம்பாட்டிற்கு பங்களிக்கும் முக்கிய காரணியாகும். SAFAR மாதிரி முன்னறிவிப்பு, AQI மேலும் மேம்படுத்தப்பட்டு திங்களன்று மோசமான வகையின் கீழ் இறுதியில் இருக்கக்கூடும் என்று தெரிவிக்கிறது. நவம்பர் 25  ஆம் தேதிக்கு காற்றின் தரத்தில் ஓரளவு சரிவு இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால், 'மோசமான' பிரிவின் உயர் இறுதியில் 'மிக மோசமான' பிரிவின் கீழ் இறுதியில் இருக்கும். AQI நவம்பர் 26 ஆம் தேதி மோசமான பிரிவில் தங்கியிருக்க வாய்ப்புள்ளது. மேலும் போதுமான மழை பெய்தால் அவை குறைய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.