காற்று மாசுடன் கடும் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால், டெல்லி ரயில் நிலையத்தில் சுமார் 10 ரயில்கள் தாமதமாகியுள்ளது......


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வடமாநிலங்களில் தற்போது குளிர் வாட்டி வருகிறது. டெல்லியில் ஏற்பட்டிருக்கும் இந்த தூசி மண்டலத்தால் சாலையில் வாகனங்களை ஓட்டிச்செல்ல முடியாத நிலைமை உள்ளாகியுள்ளது. மேலும் இந்த காற்று மாசு உச்சக்கட்ட நிலையை அடைந்துள்ளதாக மாசுகட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.


டெல்லியில் தொடர்ந்து கடும் பனிபொழிவு நிலவுவதால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பனிமூட்டம் அதிகமாக இருப்பதால், எதிரே வரும் வாகனங்கள் சரிவர தெரியாத நிலை உள்ளது.


இந்நிலையில், பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து உத்தரபிரதேசம், அரியானா, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு செல்லும் 10 ரயில்கள் தாமதமாக புறப்படும் என்றும், மேலும் சில ரயில்களின் நேரங்களும் மாற்றி அமைக்கப்பட உள்ளதாகவும் ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தைபோன்று விளக்குகளை ஒளிரவிட்டப்படியே வாகனம் ஓட்டும் நிலை நீடிக்கிறது.