டெல்லி பல்கலை., பல்வேறு கோரிக்கைகளுடன் மாணவிகள் போராட்டம்!
மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என கோரி டெல்லி பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்!
புதுடெல்லி: மாணவிகள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய வேண்டும் என கோரி டெல்லி பல்கலை கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்!
டெல்லி பல்கலைகழக மகளிர் விடுதிகளில் மாணவிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாடு அகற்றுதல் உள்ளிட்ட 21 கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேற்று டெல்லி பல்கலை கழக மாணவிகள் பல்கலை., துணைவேந்தரிடன் அளித்தனர். இந்த கோரிக்கைகளை நிர்வாகம் ஏற்க மறுத்த நிலையில் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்போராட்டத்தின் போது மாணவிகளுக்கும், காவல்துறையினருக்கும் இடையில் அடிதடி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல்கலைக்கழக வளாகத்திலும், பல்கலை இணை சார் கல்லூரிகளிலும் விடுதியில் தங்கி பயின்று வரும் அனைத்து மாணவிகளுக்கும் விதிக்கப்பட்டுள்ள நேர கட்டுப்பாட்டினை அகற்றுவது, உடல் ஊனமுற்ற மாணவர்கள் சந்தித்து வரும் பிரச்சனைகள் சரிசெய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இந்த மனு உள்ளடக்கியிருப்பதாக போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து மாணவி மௌனிகா ஸ்ரீசாய் தெரிவிக்கையில்... "2.5 லட்சம் மாணவர்கள் பயிலும் டெல்லி பல்கலை கழகத்தின் விடுதியில் 5,000 இடங்கள் மட்டுமே உள்ளது. இதனால் வெளியூரில் இருந்து டெல்லி வந்து தங்கி பயிலும் மாணவர்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். ஆண்கள் விடுதியை ஒப்பிடுகையில் பெண்கள் விடுதியில் இரு மடங்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது, இதற்கு பெங்களுக்கான பாதுகாப்பு கட்டணம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. IIT, JNU கல்லூரிகளில் மாணவிக்களுக்கு இரவில் விடுதி திரும்பும் நேரம் நிர்ணயிக்கப்படுவதில்லை.. ஜமையா விடுதியில் மாணவிகள் விடுதி திரும்பும் நேரத்தினை 7.30-லிருந்து 10.30-ஆக அதிகரித்துள்ளனர். எங்கள் கோரிக்கையும் அது தான். விடுதி திரும்பும் நேரத்தினை முழுமையாக நீக்கினால் மிகவும் நல்லது" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த போராட்டத்தில் மாணவிகளுடன் சேர்ந்து மாணவர்களும் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இந்த போராட்டம் குறித்து போராட்டத்தில் ஈடுப்படும் மாணவர்கள் தெரிவிக்கையில்... "விடுதியில் தங்கியுள்ள மாணவிகள் சிறைவாசத்தை அனுபவித்து வருகின்றனர். குறிப்பாக வெளியில் இருந்து உணவுகளை பெற மாணவிகள் அனுமதிக்கப் படுவதில்லை, அதேவேலையில் இந்த நடைமுறை ஆண்கள் விடுதியில் அனுமதிக்கப்படுகிறது. ஆண்களுக்கும் பெண்களுக்கும் இங்கு தனி தனி சட்டங்கள் விதிக்கப்பட்டுள்ளது." என தெரிவிக்கின்றனர்.