டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் இருதரப்பு இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தலைநகர் டெல்லியில் CAA ஆதரவாளர்களுக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நடந்த மோதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் ஒருவர் காவலர். மற்ற 6 பேரும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, வடகிழக்கு டில்லியின் யாபிராபாத், மஜ்பூர் மற்றும் பஜான்புரா பகுதிகளில் வன்முறை வெடித்தது. இருதரப்பினர் மாறி மாறி கற்களை வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். வன்முறையில் வீடு, கடை, வாகனங்கள், பெட்ரோல் நிலையம் சூறையாடப்பட்டன. இதில், ஒரு போலீஸ்காரர் உள்பட ஏழு பேர் பலியாகி உள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து டெல்லியில் இரண்டாவது நாளாக இன்றும் மோதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. பிரஹம்புரி மற்றும் மஜ்பூர் ஆகிய இடங்களில் இருபிரிவினர், ஒருவர் மீது ஒருவர் கல்வீசித் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, பிரஹம்புரியில் அதிவிரைவுப் படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினர். வடகிழக்கு டெல்லியில் தொடர்ந்து பதற்றான சூழல் நிலவுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கை பேணுவது தொடர்பாக டெல்லி காவல் ஆணையர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


இழப்பீடு வழங்க நேரிடும் நெடுஞ்சாலை ஆணையத்திற்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை டெல்லியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்தும் கலவரத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாகவும் உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலும் ஆலோசனை நடத்தினார். பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களையும் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து டெல்லியின் எல்லைகளுக்கு சீல் வைக்க வேண்டிய அவசியம் உள்ளது என்றார். இதையடுத்து, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் காயமடைந்தவர்களை சந்திக்க GTB மருத்துவமனைக்கு சென்றார்.  



இந்நிலையில், டெல்லியின் வடகிழக்குப் பகுதியில் மீண்டும் இருதரப்பு இடையே பயங்கர மோதல் நிலவி வருகிறது. இதனால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. யாஃபிராபாத், மௌஜ்பூர், சந்த்பாக், குரேஜி காஸ் மற்றும் பஜான்புரா ஆகிய இடங்களில் நடந்த இன மோதல்களில் 48 பொலிஸ் பணியாளர்கள் மற்றும் 98 பொதுமக்கள் காயமடைந்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்பகுதியில் தீப்பிழம்புகளை வீசும்போது மூன்று தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தனர்.