டெல்லியில் திடீர் ஜில்-ஜில் மழை: மக்கள் மகிழ்ச்சி!
டெல்லி நகரின் பல இடங்களில் திடீரென மழை பெய்வதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!
டெல்லி நகரின் பல இடங்களில் திடீரென மழை பெய்வதால் கோடை வெப்பம் தணிந்து மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்!
பருவ மழை தொடங்கியுள்ள நிலையில் தற்போது டெல்லியின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மண்டி ஹவுஸ் மற்றும் ஃபெரோஸ் ஷா சாலையில் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் குறைத்து காணப்படுகிறது.
டெல்லியில் கடந்த மூன்று மாதா காலம் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று திடீரென கருமேகங்கள் சூழ்ந்து வானிலை மாறி மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும்,புறநகர் பகுதிகளிலும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னையில், மீனம்பாக்கம், அனகாபுத்தூர், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் நல்ல மழை தொடர் மழை பெய்து வருகிறது.