டெல்லியில் காற்றின் தரக் குறியீடு இன்று காலை முதல் பஞ்சாபி பாக் பகுதியில் 429 ஆக பதிவாகியது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த சில நாட்களாக டெல்லியில் காற்றின் தரம் மீண்டும் மிக மோசமான பிரிவில் காணப்பட்டு வருகிறது. பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் தொடர்ந்து சில நாள்களாக தீ புகை இருந்து வருவதும் இதற்கு ஒரு காரணமாகக் கூறப்படுகிறது.


டெல்லியில் தொடர்ந்தது காற்றின் தரம் சற்று மேம்பட்டு மோசமான பிரிவில் இருந்து வருகிறது. இந்நிலையில், காற்றின் தரம் இன்று மீண்டும் மிக மோசமான பிரிவுக்குச் சென்றது.


கடந்த ஆண்டு டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான பிரிவுக்குச் சென்றது. இந்நிலையில், காற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில் மத்திய அரசும், டெல்லி அரசும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன. இருப்பினும், அண்டை மாநிலங்களில் பயிர்க் கழிவுகளை விவசாயிகள் எரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது.


இந்நிலையில், டெல்லியில் உள்ள பல்ஸ்வா பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கில் தொடர்ந்து சில நாள்களாக வெளியாகும் தீபுகையால் காற்றின் தரம் மோசமான பிரிவில் இருந்து மிக மோசமான பிரிவுக்கு சென்றது.


டெல்லியில் காற்றின் தரக் குறியீடு இன்று காலை முதல் பஞ்சாபி பாக் பகுதியில் 429 ஆக பதிவாகியது. மேலும் ஆர்.கே புரம் பகுதியில் 290 ஆக பதிவாகியது. அதேசமயம் பூசா பகுதியில் காற்றின் தரக் 283 ஆக பதிவாகியது. 



 



 



 


காற்றின் தரக் குறியீடு (0 - 50) அளவில் இருந்தால் காற்றின் தரம் நன்றாக இருப்பதாகக் கருதப்படுகிறது. (51-100) திருப்தி, (101-200) மிதமானது, (201-300) மோசமானது, (301-400) மிக மோசமானது, (401- 500) இருந்தால் காற்றின் தரம் கடுமையானது என்றும் அளவிடப்படுகிறது.