பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த கால அவகாசம் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்து விட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கு விசாரணையை 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:- இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு 9 கேள்விகளை நீதிபதிகள் உருவாக்கியுள்ளனர். மருத்துவமனை, ரயில் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டை பயன்படுத்த காலக்கெடுவை நீட்டிக்க மறுத்து விட்டது. வாரந்தோறும் ரூ.24 ஆயிரம் எடுக்கலாம் என்ற விதியை பின்பற்றுமாறு கூறியுள்ளது. பல்வேறு மாநிலங்களில் ரூபாய் நோட்டு வாபசிற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கிற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆறு வாரங்களுக்குள் பழைய ரூபாய் நோட்டுகள் சம்பந்தமான கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


மத்திய அரசின் கொள்கை தொடர்பான முடிவுகளில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்


நவம்பர் 8-ம் தேதி பிரதமர் மோடி 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்தார். மேலும் பணம் எடுக்க பல்வேறு நிபந்தனைகளை மத்திய அரசு விதித்தது. ரூபாய் நோட்டு வாபஸ் பெறப்பட்டதை பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.