Demonetization 2.0: ₹2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்வது எப்படி!
இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
2000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் நவம்பர் 2016 இல் RBI சட்டம், 1934 இன் பிரிவு 24(1) இன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில், இந்தியாவில் 2000 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்து, செப்டம்பர் 30,2023 க்குள் அவற்றை மாற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய மற்றும்/அல்லது மாற்றுவதற்கு செப்டம்பர் 30, 2023 வரையிலான நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
2000 ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளும் முறை
2000 ரூபாய் நோட்டு வைத்திருப்பவர்கள், செப்டம்பர் 30,2023 க்குள் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக்கொள்ள வேண்டும். மே 23, 2023 முதல் ஒரு நாளுக்கு 20,000 ரூபாய் வரையில் ஒருவர் 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள முடியும். 2000 ரூபாய் நோட்டுகளை ஒரே நேரத்தில் 20,000/- வரை மாற்றுவதற்கான வசதி மே 23, 2023 முதல் ரிசர்வ் வங்கியின் வெளியீட்டுத் துறைகளைக் கொண்ட 19 பிராந்திய அலுவலகங்களில் (ROS) வழங்கப்படும்.
மக்கள் இந்தியாவில் இருக்கும் எந்த வங்கியிலும் தங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கி கணக்கில் டெபாசிட் செய்யவோ அல்லது வேறு மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொண்டோ மாற்றிக்கொள்ளலாம். 2000 ரூபாய் மாற்றிக்கொள்ளும் பணியில் வங்கி பணிகள் பாதிக்க கூடாது என்பதற்காக 20000 ரூபாய் என்ற வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த 2000 ரூபாய் என்ற வரம்பு என்பது வேறு ரூபாய் நோட்டுகளை மாற்று போது மட்டுமே. வங்கி கணக்கில் டெப்பாசிட் செய்யும் போது எவ்விதமான வரம்போ, தடையோ, கட்டுப்பாடோ இல்லை
வெள்ளிக்கிழமை RBI வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்திய ரிசர்வ் வங்கியின் Clean Note Policy கொள்கையின் படி, புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2000 ரூபாய் நோட்டுகள், செப்டெம்பர் 30ம் தேதி வரை செல்லுபடியாகும் என ஆர்பிஐ தெரிவித்துள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ள பொதுமக்களுக்கு போதுமான நேரத்தை வழங்க முடிவு செய்து அனைத்து வங்கிகளும் செப்டம்பர் 30, 2023 வரை 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யவோ அல்லது பணத்திற்கு இணையாக தொகையை, வேறு மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை வழங்கும் வசதியை உறுதி செய்ய வேண்டும் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டு உள்ளது.
மேலும் படிக்க | ₹2000 நோட்டை திரும்ப பெறுகிறது RBI... வெளியான பரபரப்பு தகவல்!
2000 மதிப்பிலான ரூபாய் நோட்டுகளில் சுமார் 89% மார்ச் 2017க்கு முன் வெளியிடப்பட்டது. அவற்றின் மதிப்பிடப்பட்ட ஆயுட்காலம் 4-5 ஆண்டுகள் முடிவடைகிறது. புழக்கத்தில் உள்ள இந்த ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு மார்ச் 31, 2018 அன்று உச்சத்தில் இருந்த 26.73 லட்சம் கோடியிலிருந்து (புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 37.3%) 23.62 லட்சம் கோடியாகக் குறைந்துள்ளது. இந்த மதிப்பு மார்ச் 31, 2023 அன்று புழக்கத்தில் உள்ள நோட்டுகளில் 10.8% மட்டுமே. பண பரிவர்த்தனைகளுக்கு இந்த மதிப்பிலான நோட்டுகள் பொதுவாகப் பயன்படுத்துவதில்லை என்பதும் கவனிக்கப்பட்டது. மேலும், பொதுமக்களின் கரன்சி தேவையை பூர்த்தி செய்ய மற்ற வகை ரூபாய் நோட்டுகளின் இருப்பு போதுமானதாக உள்ளது.
மேற்கூறியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்திய ரிசர்வ் வங்கி, 2000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் 2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யலாம் மற்றும்/அல்லது எந்த வங்கிக் கிளையிலும் மற்ற மதிப்புகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றலாம். வங்கிக் கணக்குகளில் டெபாசிட் செய்வது வழக்கமான முறையில், அதாவது கட்டுப்பாடுகள் இல்லாமல், தற்போதுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் பிற சட்டப்பூர்வ விதிகளுக்கு உட்பட்டுச் செய்யப்படலாம்.
செயல்பாட்டு வசதிக்காகவும், வங்கிக் கிளைகளின் வழக்கமான செயல்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுவதைத் தவிர்க்கவும், மே 23, 2023 முதல் எந்த வங்கியிலும் ஒரே நேரத்தில் 220,000/- வரை 2000 ரூபாய் நோட்டுகளை மற்ற வகைகளின் ரூபாய் நோட்டுகளாக மாற்றிக்கொள்ளலாம். உடனடியாக அமலுக்கு வரும் வகையில் 2000 ரூபாய் நோட்டுகளை வெளியிடுவதை நிறுத்துமாறு வங்கிகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ