உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500ரூ மற்றும் 1000 ரூ நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500ரூ மற்றும் 1000 ரூ நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 10 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்!


பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட ரூபாய் நோட்டுகளை சட்டவிரோதமாக குற்றம் சாட்டப்பட்வர்கள் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு கிடைத்த புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவயிடத்தில் சோதனை நடத்தினர்.


இந்த சோதனையில் காவல்துறையினருடன், தேசிய புலனாய்வு அமைப்பினரும் பங்கேற்றனர். சோதனையின் முடிவில் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.



மேலும் இவ்வழக்கு தொடர்பாக 10 பேரினை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்வர்கள் மீது காவல்துறையினர் வழக்கப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்!