ஆம்புலன்ஸ் தர மறுப்பு; ரிக்ஷாவில் கொண்டு செல்லப்பட்ட பிணம்!
உத்தரபிரதேசத்தில் பிணத்தை கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் தர மறுத்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நடைபெற்றுள்ளது.
பிணத்தை கொண்டு செல்ல உத்தரபிரதேசத்தில் ஒரு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டது. போலீஸ்சார் கேட்டும் ஆம்புலன்ஸ் கிடைக்காது என்று மறுத்துவிட்டனர்.
போலீசாரின் தகவலின் படி அட்ரா ரயில் நிலையத்தை ஒட்டிய தண்டவாளத்தில் பிணம் கிடந்தது. இறந்தவரின் பெயர் ராமசரே என்பது பின்னர் கண்டறியப்பட்டு உறவினர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதனையடுத்து ரயில்வே போலீசார் சில மருத்துவமனைகளை தொடர்பு கொண்டு ஆம்புலன்ஸ் சேவை கேட்டுள்ளனர். ஆனால் எந்த மருத்துவமனையும் ஆம்புலன்ஸ் தர மறுத்துவிட்டது.
இதனால் உறவினர்கள், பிணத்தை பிரேத பரிசோதனை செய்வதற்காக ரிக்ஷாவில் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டது.
இது குறித்து ரயில்வே போலீஸ் கூறியது:-
“ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்காததால், பிரேத பரிசோதனை செய்ய உடலை ரிக்ஷாவில் கொண்டு செல்லுமாறு உறவினர்களிடம் கேட்டுக் கொண்டோம்” என்றார்.