கர்நாடக மாநிலம் பெங்களூருவின் மாநகத்ர துணை மேயர் ரமீலா உமாசங்கர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 28-ஆம் நாள் துணை மேயர் பதவிக்கு தேர்வான இவர் இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் பதவியேற்றுக்கொண்டார். பதவியேற்பு விழா நடைபெற்று இரண்டு தினங்களே முடிந்துள்ள நிலையில் அவர் தற்போது மரணமடைந்துள்ளது அவரது கட்சியினர் மற்றும் குடும்பத்தினர் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


44 வயதான ரமீலா பெங்களூரு நகரின் காவேரிபுரா பகுதி வார்டு கவுன்சிலராக முதன் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு துணை மேயர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலிலும் வெற்றியடைந்திருந்தார்.



ரமீலா உமாசங்கரின் மறைவுக்கு, கர்நாடக முதல்வர் குமாரசாமி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். தங்களுடைய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கு சிறந்த விசுவாசியாக இருந்தவர் ரமீலா என்று முதல்வர் வெளியிட்டுள்ள  அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


முன்னாள் பிரதமர் தேவகௌடா, முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா மற்றும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களும் ரமீலாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.