ஞானவாபி வழக்கில் அதிரடி தீர்ப்பு: வழக்கு கடந்து வந்த பாதை..!!
ஞானவாபி வழக்கில் அஞ்சுமன் இஸ்லாமியா மசூதி கமிட்டியின் மனுவை வாரணாசி நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்த நிலையில், ஞானவாபி வழக்கின் தீர்ப்பால் இந்து தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
உத்தரப் பிரதேசம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. 1669 ஆம் ஆண்டில் கோயில் முற்றிலுமாக அழிக்கப்பட்டு அவுரங்கசீப்பின் உத்தரவின் பேரில் அங்கு ஒரு மசூதி கட்டப்பட்டதாக ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், ஞானவாபி மசூதி வளாகத்தின் வெளிப்புறச் சுவரில், சிங்கார கவுரி அம்மன் சிலை அமைந்து உள்ளது. இந்த அம்மன் சிலைக்குத் தினமும் பூஜை நடத்த அனுமதிக்கக் கோரி, வாரணாசி நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம், ஐந்து இந்து பெண்கள் வழக்கு தொடர்ந்த நிலையில், இந்த மனு மீதான விசாரணையில், ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்தவும், வீடியோ பதிவு செய்யவும் வாரணாசி நீதிமன்றம் உத்தரவிட்டது. பலத்த பாதுகாப்பிற்கு இடையில், வீடியோ பதிவு செய்யப்பட்ட நிலையில், மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஞானவாபி சர்ச்சையில் வாரணாசி நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. ஞானவாபியில் அன்னை சிருங்கர் கௌரி வழிபட கோரிய வழக்கிறகு எதிராக இஸ்லாமிய தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை வாரணாசி மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்ததுடன், வழிபாட்டு உரிமை கோரும் மனுவை தொடர்ந்து விசாரிப்பதாகக் கூறியது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக இஸ்லாமிய தரப்பு அறிவித்துள்ளது. இந்து தரப்பு வழக்கறிஞர் விஷ்ணு ஜெயின் இது குறித்து கூறுகையில், இந்து தரப்பினர் தாக்கல் செய்த வழக்கின் சட்டபூர்வமானது அல்லது என கூறும் மனுவை தள்ளுபடி செய்து, விசாரணையை தொடர மாவட்ட நீதிபதி ஏ.கே.விஷ்வேஷ் உத்தரவு பிறப்பித்துள்ளார். வாரணாசி நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை மிகப்பெரிய வெற்றியாக இந்து தரப்பு கருதுகிறது.
வழக்கு கடந்து வந்த பாதை:
1. ஞானவாபி மசூதி தொடர்பான இந்து பக்தர்களின் மனுவை உச்ச நீதிமன்றம் மே 20 அன்று, மூத்த சிவில் நீதிபதிகள் அடங்கிய பிரிவு, வாரணாசி நீதிமன்றத்திலிருந்து வாரணாசி மாவட்ட நீதிபதி நீதிமன்றத்திற்கு மாற்றியது.
2. வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் மசூதி வளாகத்தின் வீடியோ படம் எடுக்கப்பட்டது. மசூதி தொடர்பான முக்கியமான வீடியோ ஒன்று வெளியாகியது. மசூதி வளாகத்தில் சிவலிங்கம் இருப்பதாக இந்து மனுதாரர்கள் குறிப்பிட்டனர். தொழுகைக்கு முன், இஸ்லாமியர்கள் தங்கள் கால்களைக் கழுவும் இடத்தில் சிவலிங்கம் காணப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
3. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிக்குள் வீடியோ பதிவு செய்யப்பட்டதற்கு எதிராக ஞானவாபி மஸ்ஜித் கமிட்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 1991 ஆம் ஆண்டின் வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை மீறும் செயல் இது என மனுதாரர்கள் கூறினர்.
மேலும் படிக்க | காசி விஸ்வநாதர் கோவில் - ஞானவாபி மசூதி: கி.பி.1100 முதல் 2022 வரையிலான வரலாறு
4. மசூதியில் காணப்பட்ட சிவலிங்கம் என்று கூறப்படுவதால், இந்து தரப்பு தனது கோரிக்கையை வலுவான முறையில் முன்வைக்கிறது. மசூதியின் அடிப்படை அமைப்பும் வாரணாசி கோவில் வளாகத்தின் ஒரு பகுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.
5. ஞானவாபி மசூதியின் வெளிப்புறச் சுவரில் உள்ள இந்து தெய்வங்களை தினசரி வழிபட அனுமதிக்கக் கோரி, ஞானவாபி சர்ச்சையில் ஐந்து பெண்கள் மனு தாக்கல் செய்தனர்.
6. ஞானவாபி வழக்கில் மனுதாரர் சோஹன் லால் ஆர்யா கூறுகையில், இது இந்து சமுதாயத்திற்கு கிடைத்த வெற்றி என்றார். அடுத்த விசாரணை செப்டம்பர் 22ம் தேதி நடைபெறும்.
7. இஸ்லாமியர் தரப்பின் அடுத்த கட்ட நடவடிக்கை:மாவட்ட நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்று முஸ்லிம் தரப்பு வழக்கறிஞர் மெராஜுதீன் சித்திக் கூறினார்.
8. இந்த வழக்கை 25-30 ஆண்டுகள் அனுபவம் உள்ள மூத்த நீதிபதி விசாரித்தால் நல்லது என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், சூர்ய காந்த், பி.எஸ்.நரசிம்ஹா ஆகியோர் அடங்கிய அமர்வு, சிவில் நீதிபதியின் தகுதியை குறைத்து மதிப்பிடவில்லை வில்லை என்றும், இந்த வழக்கின் சிக்கலான தன்மையைக் கருத்தில் கொண்டு, இந்த வழக்கை மூத்த நீதித்துறை அதிகாரிகள் விசாரிப்பது நல்லது எனவும் குறிப்பிட்டுள்ளது. இந்த தீர்ப்பை கருத்தில் கொண்டு காசியில் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | ஞானவாபி மசூதியில் சிவலிங்கம் கண்டறியப்பட்ட விவகாரம்; உச்ச நீதிமன்றத்தில் விசாரணை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ