மகாராஷ்டிராவின் முன்னாள் முதல்வரும், பாரதிய ஜனதா தலைவருமான தேவேந்திர பட்னாவிஸ் மாநில சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முன்னதாக ஞாயிற்றுக்கிழமை, மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் 14-வது சபாநாயகராக மூத்த காங்கிரஸ் தலைவர் நானா படோல் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இதுகுறித்து தேவேந்திர பட்னாவிஸ் தெரிவிக்கையில்., மகாராஷ்டிரா சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு நாங்கள் கிஷன் கதோரை வேட்பாளராக பரிந்துரைத்தோம், ஆனால் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அனைவருமே சபாநாயகர் ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என எங்களை வலியுறுத்தினர், மேலும் சபாநாயகர் தேர்தல் தடையின்றி நடத்தப்பட்டது என்பது ஒரு பாரம்பரியம் எனவும் குறிப்பிட்டனர்.


எனவே, மற்ற கட்சிகளின் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டு, எங்கள் வேட்பாளரின் பெயரை வாபஸ் பெற்றோம். முன்னதாக, மகாராஷ்டிரா பாஜக பிரிவு தலைவர் சந்திரகாந்த் பாட்டீல், மகாராஷ்டிராவின் பாரம்பரியத்தை மனதில் வைத்துள்ளோம், இந்த பதவியை எந்த விதமான சர்ச்சையிலும் வைக்கக்கூடாது என்று குறிப்பிட்டார். 
 
கட்சி கூட்டத்தில் நாங்கள் இந்த முடிவை எடுத்துள்ளோம் என குறிப்பிட்ட அவர், கிஷன் கிதோரியின் வேட்பு மனுக்களை நாங்கள் திரும்பப் பெற்றுள்ளோம். எதிர்ப்பின்றி சபாநாயகர் பதவிக்கு தேர்வு நடத்தப்படுவதற்கா இந்த முடிவு ஏற்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 


முன்னதாக மகாராஷ்டிரா மாநிலத்தில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் மகா விகாஷ் முன்னணி ஆட்சி அமைத்து உள்ளது. இதில், சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.  இந்நிலையில், மகாராஷ்டிரா சட்டசபை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் நேற்று நடைபெற்றது.  இதையடுத்து, மகா விகாஷ் முன்னணி சார்பில் காங்கிரஸ் MLA நானா பட்டோலே சபாநாயகர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.


நானா பட்டோலே பாஜக MP-யாக பதவி வகித்தவர். நாடாளுமன்ற தேர்தலின் போது பாரதீய ஜனதா தலைவர்களுடன் மோதல் போக்கை கடைப்பிடித்து பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசில் இணைந்தார். இவர் நடந்த முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக சகோலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.