குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக திமுக, கூட்டணி கட்சிகளில் சார்பில் மாபெரும் பேரணி அறிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23-ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாபெரும் பேரணி நடத்தப்படும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்த ஆலோசனைக்கு பின் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


நாடுமுழுவதும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள குடியுரிமை சட்டத்திருத்தம் தொடர்பாக விவாதிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நகூட்டத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் சிறுபான்மையினர்-ஈழத்தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் பா.ஜ.க - அதிமுக. அரசுகளை கண்டித்து திமுக, கூட்டணி கட்சிகளில் சார்பில் மாபெரும் பேரணி நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது. குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான இந்த போராட்டம் சென்னையில் வரும் 23-ஆம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.



2014, டிசம்பர் 31-ஆம் தேதிக்கு  முன்னர் இந்தியா இடம்பெயர்ந்த வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளை சேர்ந்த இஸ்லாமியர் அல்லாதோருக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் வகையில் மத்திய அரசு புதிய சட்ட திருத்தத்தை கொண்டுவந்தது. 


பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் துன்புறுத்தப்பட்ட மத சிறுபான்மையினருக்கு புலம் பெயர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தற்போது நாடெங்கிலும் போராட்டங்களுக்கு வழிவகுத்துள்ளது. இந்த சட்ட திருத்தத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய டெல்லி ஜமியா மிலியா இஸ்லாமிய பல்கலைகழக மாணவர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலை கண்டித்து, நாடு முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். 


மத்திய அரசை கண்டித்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து திமுக சார்பில் நேற்று தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடந்தது. காஞ்சீபுரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


இந்நிலையில் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசிப்பதற்காக அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டம் இன்று திமுக தலைமை கழகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அண்ணா அறிவாலயத்தில் நடைப்பெற்ற இந்த கூட்டத்துக்கு திமுக கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி, சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் இன்று நடைப்பெற்றது. இந்த அனைத்தக் கட்சி கூட்டத்தில், துரைமுருகன், வைகோ, கேவி தங்கபாலு, காதர் முஹைதீன், திருமாவளவன், ரவிக்குமார், ஈஸ்வரன், ஜி ராமகிருஷ்ணன் ஆகிய தலைவர்கள் ஆகியோர் பங்கேற்றனர். குடியுரிமைய திருத்த சட்டத்தின் சிக்கல்கள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தினர். கூட்டத்தை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் முக ஸ்டாலின் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக சென்னையில் வரும் 23-ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் மாபெரும் பேரணி நடத்தப்படும் என அறிவித்தார்.