Video: மோடி சாப்பிடும் காளான் விலை ரூ.80,000 மட்டுமே!
பிரதமர் மோடி இயல்பாக கருமை நிறம் கொண்டவர், தற்போது அவரின் நிறம் மாரியிருப்பதற்கு காரணம் அவர் தினம் உண்னும் காளான் தான்!
182 சட்டசபை தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலுக்கான வாக்குபதிவு டிசம்பர் 9 மற்றும் 14-ம் தேதி என 2 கட்டமாக நடைபெறுகிறது.
பாஜக-வின் கோட்டை என கருதப்படும் குஜராத்தில், ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள பாஜக-வும் அந்தக் கட்சியிடம் இருந்து ஆட்சியை கைப்பற்ற காங்கிரசும் பல யுக்திகளை கையாண்டு வருகின்றன.
குஜராத் சட்டமன்ற தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 14-ஆம் தேதி நடைப்பெற உள்ள நிலையில், இரண்டாம் கட்ட பிரச்சாரம் இன்றோடு முடிவடைகிறது.
இந்நிலையில் இன்றைய பிரச்சாரத்தில், குஜராத் காங்கிரஸ் ஓ.பி.சி. தலைவர் அல்பேஷ் தாகோர் பிரதமர் மோடி குறித்து தனது கருத்தினை பதிவு செய்துள்ளார். பிரச்சாரத்தின் போது அவர் தெரிவித்துள்ளதாவது...
"பிரதமர் மோடி இயல்பாக கருமை நிறம் கொண்டவர், தற்போது அவரின் நிறம் மாரியிருப்பதற்கு காரணம் அவர் தினம் உண்னும் காளான் தான், அந்த காளானை சாமானியரால் வாங்க முடியாது. ஏனெனில் அதன் விலை ரூ.80,000 மட்டுமே... தாய்வானில் இருந்து வரவைக்கப்படும் இந்த காளான்களை அவர் நாளொன்றுக்கு 5 என தினம் எடுத்துக்கொள்கிறார். இதனால் தான் அவர் அழகு மெருகேறியுள்ளது" என தெரிவித்துள்ளார்.
இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது!