Kerala Ernakulam Bomb Blast Update: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமசேரி பகுதியில் ஒரு கிறிஸ்துவ சபையின் பிரார்த்தனை கூட்டத்தில் இன்று காலை அடுத்தடுத்து மூன்று வெடிகுண்டுகள் வெடித்து சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இன்று காலை 9 மணியளவில் நடைபெற்ற இந்த தொடர் குண்டுவெடிப்பில் லிபினா என்ற பெண் உயிரிழந்தார். மேலும், 45 பேர் காயமடைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பேஸ்புக் லைவ் வீடியோ


அந்த வகையில், இந்த குண்டுவெடிப்புக்கும் பயங்கரவாதிகளுக்கும் தொடர்பிருக்குமா என்ற அச்சம் எழுந்த நிலையல், குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு பொறுப்பேற்று ஒருவர் திருச்சூர் மாவட்டம் கொடகரா காவல் நிலையத்தில் சரணடைந்ததாக தகவல்கள் வெளியாகின. அவரின் பெயர் டொமினிக் மார்டின் (48) என தகவல்கள் தெரிவிக்கின்றன. 


குண்டுவெடிப்பு நடந்த அந்த கிறிஸ்துவ சபையின் உறுப்பினராக கூறிக்கொள்ளும் மார்டின், இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கான காரணத்தை வீடியோவாக வெளியிட்டார். அதாவது, காவல் நிலையத்தில் சரணடைவதற்கு முன் அவர் பேஸ்புக் லைவ் மூலம் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோ 5 நிமிடம் 57 வினாடிகள் உள்ளது.


மேலும் படிக்க | ஏதோ நடக்கப்போகுது..! புல்வாமா தாக்குதலுக்கு முன் ராகுல்காந்தியின் உள்ளுணர்வு


குண்டுவெடிப்பு செய்தது ஏன்?


டொமினிக் மார்டின் என்று கூறப்படும் அந்த நபர் வீடியோவில் கூறியிருப்பதாவது,"என் பெயர் மார்ட்டின். யெகோவா சாட்சிகள் (Jehovah Witnesses) சபையால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்தது. அதன் விளைவாக குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டது. இச்சம்பவத்திற்கு நான் முழுப் பொறுப்பேற்கிறேன். நான் ஏன் இந்த செயலைச் செய்தேன் என்பதை விளக்கவே இந்த பேஸ்புக் லைவ் நடத்துகிறேன்.



ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த சபை தவறானது என்பதையும், அதன் போதனைகள் மிகவும் தேச விரோதமானது என்பதையும் உணர்ந்தேன். இதை நான் அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து, அவர்களின் செயல்பாட்டை சீர்செய்ய அவர்களிடம் வலியுறுத்தினேன். இருப்பினும், அவர்கள் இதுவரை அவ்வாறு செய்ய முன்வரவில்லை.


'சாதாரண மனிதனின் கைகளில்...'


அவர்கள் கற்பிப்பதை நான் எதிர்க்கிறேன். இந்த சபை இந்த சமுதாயத்திற்கு தேவையில்லை என்பதை நான் முழு நம்பிக்கையுடன் சொல்கிறேன். உடனே காவல் நிலையத்தில் சரணடைவேன். இதன்பின் வேறு எந்த விசாரணையும் தேவையில்லை. நான் இன்னும் ஒரு விஷயத்தைச் சொல்ல நினைக்கிறேன். நான் எப்படி குண்டுவெடிப்புகளை செய்தேன், திட்டமிட்டேன் போன்ற விவரங்கள் செய்தி சேனல்களிலோ சமூக ஊடகங்களிலோ ஒளிபரப்பப்படக் கூடாது. இந்த தகவல் ஒரு சாதாரண மனிதனின் கைகளில் ஆபத்தானது மற்றும் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்தலாம், இதோடு முடித்துக் கொள்கிறேன்" என்றார்.


மார்டின்தான் காரணம் - காவல்துறை


மார்டின் குறித்து போலீசார் தரப்பில் கூறும்போது, அவரின் வாக்குமூலம் முரண்பாடாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த குண்டுவெடிப்புக்கு காரணமானவர் டொமினிக் மார்டின்தான் என்று காவல்துறை உறுதிப்படுத்தி உள்ளது. அவரின் மொபைல் போனில் இருந்து ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கிறது. மார்டினிடம் போலீசார் மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொச்சியில் உள்ள அவரின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இருப்பினும், யெகோவா சாட்சிகள் என்ற அந்த கிறிஸ்துவ சபையின் தரப்பில் மார்டினை யார் என்றே தெரியாது என்று கூறியுள்ளனர். மேலும், 


மேலும் படிக்க | ’ஓபிசி, தலித் பழங்குடியினருக்கு பிரதிநிதித்துவம் இல்லை’ ராகுல் காந்தி அட்டாக்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ