பிரதமர் மோடியின் ஹுஸ்டன் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்ப்பதை வெள்ளை மாளிகள் உறுதி செய்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 அமெரிக்க பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி வரும் 22 ஆம் தேதி ஹுஸ்டனில் இந்தியாவில் இருந்து குடியேறியவர்கள் மத்தியில் உரை நிகழ்த்த உள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள டிரம்ப் முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமெரிக்காவுக்கான இந்திய தூதரக அதிகாரி ஹர்ஷ் வரதன் சிருங்கலா, இரு தலைவர்களும் ஒரே மேடையில் சந்திக்க இருப்பது இருவரிடையே உள்ள நெருக்கமான தனிப்பட்ட நட்பையும் இருநாடுகளுக்கு இடையிலான இணக்கமான சூழலையும் வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்தார்.


தனித்துவம் வாய்ந்த சந்திப்பாக இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்த அவர், வரலாற்று சிறப்பு வாய்ந்த இந்த எதிர்பாராத சந்திப்பு இருநாடுகளுக்கும் பலவித பயன்களை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.




இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில்; செப்டம்பர் 22 ஆம் தேதி, ஜனாதிபதி டொனால்ட் ஜே. டிரம்ப், ஹூஸ்டன், டெக்சாஸ், மற்றும் ஓஹியோவின் வாபகோனெட்டா ஆகிய நாடுகளுக்குச் சென்று அமெரிக்கா, இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான முக்கியமான கூட்டாண்மைகளை அடிக்கோடிட்டுக் காட்டுவார். ஹூஸ்டனில், இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு நிகழ்வில் அதிபர் டிரம்ப் பங்கேற்பார்" என குறிப்பிட்டுள்ளது. 


காஷ்மீர் விவகாரத்தில், அமெரிக்க எம்.பி-க்கள் கவலை தெரிவித்துள்ள நிலையில், இந்த கூட்டத்தில் டிரம்ப் பங்கேற்பது, அவரது ஆதரவை மோடிக்கு அளிக்கும் வகையில், சமிஞ்சைகள் வெளிப்படுத்தும் எனக்கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க பயணத்தில், அதிபர் டிரம்ப்பை, பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பு நியூயார்க் நகரம் அல்லது வாஷிங்டன்னில் நடக்கலாம் என தெரிகிறது. வரும் 28 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.