வரதட்சணை புகாரில் சம்பந்தபட்டவரை உடனடியாக கைது செய்ய வேண்டிய அவசியமில்லை என சுப்ரீம் கோர்ட் அறிவித்துள்ளது. அதாவது 1983-ம் ஆண்டில் கட்டமைக்கப்பட்ட வரதட்சணை கொடுமைப்படுத்துதல் சட்டத்தை தவறாக பயன்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற இந்த உத்தரவை தெரிவித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வியாழக்கிழமை இந்திய குற்றவியல் சட்டப்பிரிவு 498 ஏ (ஐபிசி) பிரிவின் கீழ் வரதட்சணை வழக்கில் கைது செய்யப்பட்டு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஆரம்ப விசாரணையை நடத்தாமல் "கட்டாய கைது நடவடிக்கை" எடுக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. 


நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மூன்று உறுப்பினர்களை உள்ளடக்கிய குடும்ப நல அமைப்புகளை(FWC)  உருவாக்கி, அதன் மூலம் வரதட்சணை புகாரில் சம்பந்தபட்டவரை விசாரிக்க வேண்டும். அவர்களின் தரப்பு விளக்கத்தை கேட்க வேண்டும். பிறகு குடும்ப நல அமைப்புகள் தரும் அறிக்கை அடிப்படையில் கைது நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என நீதிபதிகள் ஏ.கே. கோயல் மற்றும் யூ.யு.லலிட் ஆகியோரின் அமர்வு பெஞ்ச் தெரிவித்துள்ளது. மேலும் போலிஸ் அல்லது நீதிபதியால் பெறப்பட்ட 498 ஏ பிரிவுக்கு உட்பட்ட ஒவ்வொரு புகாரும் குடும்ப நல(FWC) குழுவால் கவனிக்கப்பட வேண்டும் எனவு நீதிபதிகள் கூறினார்கள்.