திருவனந்தபுரம் : கேரளாவில் மீண்டும் தலை தூக்கும் வரதட்சணை கொடுமை மரணங்கள். இன்றிரவு நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை என கூறிய சில நாட்களில் மர்ம மரணம் அடைந்த இளம் பெண்.

COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவை சேர்ந்த சுனிஷாவுக்கும் கண்ணூர் மாவட்டம் பையனூரைச் சேர்ந்த விஜீஷ் என்பவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. சமீபத்தில் சுனிஷா வீட்டில் இறந்தநிலையில்  கிடந்தார். ஆரம்பத்தில் இது தற்கொலை  என்று கருதப்பட்டாலும், இப்போது அந்த பெண் தனது மாமியார் கொடுமையால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியிருந்தது தெரியவந்துள்ளது.



சுனிஷாவுக்கு நேர்ந்த கொடுமைகளை விவரிக்கும் ஆடியோ பதிவுகள் இப்போது ஊடகங்களில் வெளிவந்துள்ளன.உங்களால் முடிந்தால், தயவு செய்து இப்போதே வாருங்கள். நான் வரத் தயாராக இருக்கிறேன், எனது கணவரும் அவரது தாயாரும் என்னை அடித்து துன்புறுத்துகின்றனர்.  இன்றிரவு நான் உயிருடன் இருப்பேனா என்று தெரியவில்லை. என தான் மரணமடைவதற்கு சில நாட்களுக்கு முன்  தன் சகோதரனிடம் பேசிய ஆடியோவும் ஒன்று

சுனிஷா குடும்பத்தினர் போலீசில் பலமுறை  புகார் அளித்து உள்ளனர். விஜீஷ் அரசியல் செல்வாக்கு உள்ள குடும்பம் என்பதால் எதுவும் எடுத்துகொள்ளப்படவில்லை.கேரளாவில் கடந்த சில மாதங்களாக இதுபோல்  பல மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இறப்புகள் அனைத்தும் தற்கொலை என்றே கூறப்படுகிறது.ஆனால் வரதட்சணை கொடுமை என புகார்கள் பதிவாகி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR