2018-19 கல்வியாண்டுக்கான M.Phil. / Ph.D, Post Graduate Diploma, Post Graduate, Undergraduate பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளதாக டெல்லி பல்கலைக்கழகம் [ The University of Delhi (DU)] அறிவிப்பு விடுத்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அனைத்து பிரிவுகள் மற்றும் கோட்டா அடிப்படையிலான மாணவர் சேர்க்கை ஆன்லைன் முன்பதிவு மூலம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மதிப்பெண்களுடன் விண்ணப்பிக்கும் மாணவர்களுக்கு கட்ஆப் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது. 


ஆன்லைன் பதிவு தேதிகளின் விவரம் பின்வருமாறு:


1. Undergraduate Programmes: May 15, 2018
2. Post Graduate Programmes: May 18, 2018
3. Post Graduate Diploma in Cyber Security and Law: May 18, 2018
4. M.Phil. / Ph.D. Programmes: May 20, 2018


2018-19 கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைமுறைகள் பற்றி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் விதமாக ‘ஓபன் டே’ என்ற திறந்தநாள் சந்திப்பு கூட்டம், வடக்கு கேம்பஸின் (North Campus) 4வது கேட் பகுதியில் அமைந்துள்ள மாநாட்டு மையத்தில் வரும் 21-ம் தேதி மற்றும் 29-ம் தேதி இடைப்பட்ட தேதிகளில் நடைபெற உள்ளது. 


காலை 10 முதல் 11.30 மற்றும் மதியம் 12 முதல் 1.30 என இரு வேளைகளில் நடைபெறும்.


இதில் கலந்து கொண்டு, முன்பதிவு விவரம், சேர்க்கை நடைமுறை, அட்டவணை உள்ளிட்ட தேவையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.


இதில் பல்கலை பற்றிய சிறிய அறிமுகம் கொடுக்கப்படும். பின், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் குழு விளக்கங்களை அளிக்க உள்ளனர். 


நுழைவுத்தேர்வு அடிப்படையில் நடத்தப்படும் பாடத்தின் விவரங்கள்!


1. Bachelor of Management Studies (BMS)
2. Bachelor of Business Administration (Financial Investment Analysis)
3. BA (Hons) in Business Economics,
4. BA (Hons) in Humanities 
5. BA (Hons) in Social Sciences
6. BA (Hons) in Multimedia and Mass Communication and Music