சிக்கலில் SpiceJet நிறுவனம், 17 நாட்களில் நடந்த 7 அதிர்ச்சி சம்பவங்கள்
ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று பாகிஸ்தானில் அவசரமாக தரையிறங்கியுள்ள நிலையில், இது போன்ற சம்பவம் கடந்த 17 நாட்களில் நடந்த 7 முறையாக நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்பைஸ்ஜெட் டெல்லி-துபாய் விமானம் செவ்வாய்க்கிழமை அதன் எரிபொருள் அளவைக் காட்டும் எரிபொருள் இண்டிகேட்டர் நடுவானில் கோளாறு ஏற்பட்டு கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது. மற்றொரு ஸ்பைஸ்ஜெட் விமானம் 23,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது, அதன் கண்ணாடியில் விரிசல்கள் ஏற்பட்டதை அடுத்து, மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
கடந்த 17 நாட்களில் 7 முறை தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது. சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரக அதிகாரிகள் இது குறித்து கூறுகையில், இந்தியாவின் விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ஏழு சம்பவங்களையும் விசாரித்து வருகிறது. மேலும் டிஜிசிஏ விமான நிறுவனம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடும் என கூறப்படுகிறது. இருப்பினும் இரு தரப்பினரும் இது தொடர்பாக எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது
ஏழு சம்பவங்களைப் பொறுத்தவரை, அவற்றில் 6 உள்நாட்டு விமானங்கள், ஒன்று சர்வதேச விமானம். சர்வதேச விமான சம்பவம் ஜூன் 5 அன்று காலை 150 பயணிகளுடன் டெல்லியில் இருந்து துபாய் நோக்கி பயணித்த ஸ்பைஸ்ஜெட் போயிங் 737 மேக்ஸ் விமானம் பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது இடதுபுற எரிபொருள் டேங்க்கில் எரிபொருள் வழக்கத்துக்கு மாறாக குறைவாக இருப்பதாக இன்டிகேட்டர் காட்டியது. அதைத் தொடர்ந்து அது கராச்சிக்கு திருப்பி விடப்பட்டது.
கராச்சி விமான நிலையத்தில் ஆய்வு செய்தபோது, இடதுபக்கம் இருந்த எரிபொருள் டாங்கில் எந்த விதமான கசிவும் இல்லை என்பது கண்டறியப்பட்டது. இத அடுத்து ஸ்பைஸ்ஜெட் இந்தியாவிலிருந்து மற்றொரு விமானத்தை அனுப்பிய, இரவு 10 மணியளவில், பயணிகள் அனைவரும் மீண்டும் துபாய்க்கு புறப்பட்டனர்.
மேலும் படிக்க | கர்நாடக உயர்நீதிமன்றத்தின் கதவைத் தட்டிய ட்விட்டர்: மத்திய அரசுக்கு எதிராக வழக்கு
இரண்டாவது சம்பவத்தில், 23,000 அடி உயரத்தில் அதன் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், Q400 விமானம் அவசரமாக தரையிறங்க வேண்டியிருந்தது என்று DGCA அதிகாரிகள் தெரிவித்தனர். 78 இருக்கைகள் கொண்ட காண்ட்லா- மும்பை விமானத்தில் Q400 விமானத்தில் பயணித்தவர்களின் எண்ணிக்கை உடனடியாகத் தெரியவில்லை.
ஜூன் 19 அன்று, பாட்னா விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட உடனேயே 185 பயணிகளுடன் டெல்லி நோக்கிச் செல்லும் விமானத்தின் இன்ஜினில் தீப்பிடித்தது, சில நிமிடங்களில் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. பறவை மோதியதால் என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இது கடந்த சில நாட்களில் நடந்த மிக ஆபத்தான சம்பவங்களில் ஒன்றாகும். மேலும் விமானத்தை பத்திரமாக தரையிறக்கியதற்காக விமானத்தின் பைலட் மோனிகா கன்னாவை பாராட்டினர்.
ஜூன் 19 அன்று நடந்த மற்றொரு சம்பவத்தில், கேபின் அழுத்தம் காரணமாக ஜபல்பூருக்கான விமானம் டெல்லிக்குத் திரும்ப வேண்டியிருந்தது. ஜூன் 24 மற்றும் ஜூன் 25 ஆகிய தேதிகளில் புறப்படும் போது இரண்டு தனித்தனி விமானங்களில் ஃபியூஸ்லேஜ் கதவில் எச்சரிக்கை விளக்குகள் எரிந்தன. இதை அடுத்து அவசரமாக தரையிறக்கபட்டது
ஜூலை 2 ஆம் தேதி, ஜபல்பூருக்குச் செல்லும் விமானம், 5,000 அடி உயரத்தில் கேபினில் புகைபிடித்ததைக் விமான குழு உறுப்பினர்கள் பார்த்ததை அடுத்து, அவசரமாக டெல்லி திரும்பியது.
மேலும் படிக்க | பெட்ரோல்-டீசல் GST வரம்புக்குள் வருவது எப்போது; வருவாய்த்துறை செயலர் கூறுவது என்ன
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR