இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை (Corona Second Wave) கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. எனினும் உலகெங்கிலும் பல இடங்களில் டெல்டா, டெல்டா ப்ளஸ் வைரஸ் பரவல் குறித்த தகவல்கள் வருகின்றன. இந்நிலையில், கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக அமல்படுத்தப்பட்ட வெளிநாட்டு விமான சேவை மீதான தடையை ஜூலை 31 வரை நீட்டித்து மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) இன்று (ஜூன் 30, புதன்கிழமை) சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.அந்த சுற்றறிக்கையில், வெளிநாடுகளுக்கான சரக்கு மற்றும் பயணிகள் விமான சேவை மீதான தடை வரும் ஜூலை 31 வரை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



முன்னதாக, கொரோனா பரவல்  (Corona Pandemic) காரணமாக ரத்து செய்யப்பட்ட வெளிநாட்டு விமான சேவைகள், 15 மாதங்களுக்குப் பின் இன்றுடன் ஜூன் 30ம் தேதிக்கு பிறகு தொடங்கப்படுவதாக இருந்தது


ALSO READ | Drone Attack: ஆளில்லா பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியா வகுக்கும் திட்டம்


இருப்பினும் விமான போக்குவரத்துக்கான ஒப்பந்தங்கள் உள்ள நாடுகளுக்கு இடையே குறிப்பிட்ட அளவில், பயணிகள் விமானம் மற்றும் சரக்கு விமானம் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், குறிப்பிட்ட சில வழித்தடங்களில், உரிய அனுமதியுடன், சில சர்வதேச விமானங்கள் இயக்கப்படும் எனவும் அந்த சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கையை பொருத்தவரை இன்று 45,951 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5,37,064 ஆக குறைந்துள்ளது.


ALSO READ | நாட்டில் தடுப்பூசி போடப்படும் வேகம் மகிழ்ச்சி அளிக்கிறது: பிரதமர் மோடி


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR