COVID-19 நோயாளி வெளியிட்ட பரபரப்பு வீடியோவினால், ஏற்பட்ட சிக்கல்…!!!
COVID-19 நோயாளி ஒருவர், தன்னிடம் மிக அதிக பணம் வசூலிக்கப்பட்டதாக கூறி, மருத்துவமனையை அவதூறு செய்யும் வகையில் வெளியிட்ட வீடியோவால் சிக்கலில் சிக்கியுள்ளார்.
COVID-19 நோயாளி ஒருவர், தன்னிடம் மிக அதிக பணம் வசூலிக்கப்பட்டதாக கூறி, மருத்துவமனையை அவதூறு செய்யும் வகையில் வெளியிட்ட வீடியோவால் சிக்கலில் சிக்கியுள்ளார்.
ஹைதராபாத் (Hyderabad): சமூக ஊடகங்களில் சில வைரஸ் வீடியோக்கள் கவனத்தை ஈர்க்கும் வகையில் வெளியிடப்படுகின்றன. உணர்வுகளை தூண்டும் வகையிலான வீடியோக்கள் அனைவரின் கவனத்தை கவரும். தற்போது, மக்கள் கொரோனாவினால் (Corona ), அவதிப்பட்டு வருவதால், அது தொடர்பான வீடியோக்கள் எளிதில் மற்றவர்களை சென்று அடைகின்றன. ஆனால் எச்சரிக்கை தேவை. எல்லா வீடியோக்களும் உண்மையான கதைகளைச் சொல்வதில்லை, பெரும்பாலும் ஒருதலைப்பட்சமான பாதிப்பை மட்டுமே காட்டுகின்றன.
அது போன்ற ஒரு சம்பவத்தில், ஹைதராபாத்தில் ஒரு பெண் COVID-19 நோயாளி, அந்த நகரத்தின் புகழ்பெற்ற மருத்துவமனை ஆசியா இன்ஸ்டிடியூட் ஆப் காஸ்ட்ரோஎன்டாலஜி (AIG) மீது புகார் கூறி, ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவை தயாரித்து வெளியிட்டார். இது கோவிட் -19 நோயாளிகளுக்கு பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக, தெலுங்கானா அரசினால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் ஒன்றாகும்.
ALSO READ | இந்தியாவில் கொரோனா பாதிப்பு சமூக பரவலாக மாறவில்லை - ஹர்ஷ்வர்தன்!
தனது வீடியோவில், Asian Institute of Gastroenterology மருத்துவமனை தன்னிடம் மிக அதிக பணம் வசூலித்ததாகவும் கொடுத்ததாகவும், வழங்கப்படாத சேவைகள் மற்றும் மருந்துகளுக்காக கட்டணம் வசூலித்ததாகவும் அந்த பெண் புகார் கூறினார்.
"என் தந்தை இந்த மருத்துவமனையின் அறை எண்: 856 இல் அனுமதிக்கப்பட்டார், ஏனெனில் அவர் கோவிட் -19 பரிசோதனையில் பாஸிடிவ் என வந்திருந்தது, பின்னர் பரிசோதனையில் எனக்கும் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது, நாங்கள் இருவரும் ஒரே அறையில் தங்கி இருந்தோம். எங்கள் இருவருக்கும் நோய் அறிகுறி இல்லாததால் எங்களுக்கு எந்த மருந்தும் வழங்கப்படவில்லை, ஊசியும் போடப்படவில்லை, ஆக்ஸிஜனும் வழங்கப்படவில்லை, ஆனால் லட்சங்களில் பில்கள் கிடைத்தன. நான் மருத்துவமனை அதிகாரிகளிடம் இது பற்றி கேள்வி எழுப்பியபோது, நாங்கள் பலவந்தமாக வெளியேற்றப் பட்டோம், '' என்று அந்த பெண் நோயாளி தனது வீடியோவில் ஒரு உணர்ச்சிபூர்வமான வகையில் அழுது கொண்டே கூறியுள்ளார்.
ALSO READ | உண்மையில் நமக்கு கொரோனா தடுப்பு மருந்து தேவையா... வல்லுநர்களின் கருத்து என்ன...
இருப்பினும், அவரது வீடியோவில் தனது பில்லை காட்டவில்லை. அந்த பெண்ணின் வீடியோ மற்றும் குற்றச்சாட்டுகளால் முற்றிலுமாக அதிர்ச்சியடைந்த A.I.G மருத்துவமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதாவது`` சோஷியல் மீடியாவில் பரவும் ஒரு உணர்ச்சிபூர்வமான வீடியோவில் கொடுக்கப்படும் செய்தி திட்டமிட்டு பரப்பப்படுகிறது. அது தவறானவை மற்றும் முற்றிலும் ஆதாரமற்றவை. அந்த பெண்ணின் 71 வயது தந்தை முன்பிருந்தே இருக்கும் நீண்டகால உடல் பிரச்சனையை தொடர்ந்து எங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜூன் 25 ஆம் தேதி, அவருக்கு வயிற்று போக்கு, உள்ளிட்ட உடல் உபாதைகளால், நெறிமுறைகளின்படி, அவரது வயதினரைக் கருத்தில் கொண்டு, COVID-19 பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு தொற்று இருப்பது தெரிய வந்தது. நோயாளி தானாக முன்வந்து ஒரு தனி ஏசி அறையைத் தேர்ந்தெடுத்தார். பின்னர், அவருடன் இருந்ததால், அவரது மகளுக்கும் COVID-19 பரிசோதனை செய்யப்பட்டு, அவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. லேசான அறிகுறி இருந்ததால், வீட்டில் குவாரண்டைனில் இருக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அவர் தன் தந்தையின் அதே அறையில் மருத்துவமனையில் இருக்க முடிவு செய்தார். ’’
ALSO READ | நம் சித்தர்கள் தந்த அற்புத யுக்தி..... கொரோனாவை துரத்தும் ஆற்றல் மிக்க சக்தி...!!!
இது தொடர்பாக மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக, மருத்துவமனையில் பல மருந்துகள் நோயாளியின் நிலையை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொடுக்கப்படுகின்றன. அதற்கு பில் போடப்படுகிறது. எங்கள் மருத்துவமனையின் கடுமையான தணிக்கைக் கொள்கையின்படி, இறுதி பில் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் இதுபோன்ற அனைத்து விஷயங்களையும் ஆய்வு செய்து சரி பார்க்கிறோம். இவர்கள் விஷயத்திலும், இறுதி பில், இரு நோயாளிகளுக்கும் கொடுக்கப்பட்ட அனைத்து மருந்துகள், மற்றும் சேவைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, மொத்தம் 2.06 லட்சம் ரூபாய் ஆகும். அதாவது 21 நாட்கள் தங்கி இருந்ததற்கான பில். அதாவது தந்தை 13 நாட்களும் மற்றும் மகள் 8 நாட்களும் தங்கி இருந்தனர். நோயாளிகள் இருவரும் மருத்துவ ரீதியாக உடல் நிலை சீரானவுடன் டிஸ்சார்ஜ் செய்ய அறிவுறுத்தப்பட்டனர். இருப்பினும், எங்கள் மருத்துவமனையை பொய்யாக குற்றம் சாட்டும் நோக்கத்துடன் அவர் உணர்ச்சியை தூண்டும் வகையில் தனது வீடியோவைப் பதிவுசெய்தார் என கூறப்பட்டுள்ளது.