டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணாமக டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு பயணிகள் வெளியூர் பயணம் மேற்கொள்வது அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் டெல்லியில் நிலவும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்கள் இன்று காலை 7.30 மணியளவில் இருந்து நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.


விமானம் புறப்பட தேவையான ஓடுபாதை நீளம் தென்படுதலில் சிக்கல் நிலவி வருவதால் இந்த நெறுக்கடி ஏற்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதே வேலையில் டெல்லி சர்வதேச விமான நிலையத்தினை நோக்கி வரும் விமானங்கள் சரியான நேரத்தில் வந்து சேரும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.



டெல்லி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுவதில் நிலவி வரும் தாமதம் காரணமாக, விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை என்பதாலும் வழக்கத்திற்கு அதிகமான பயணிகள் பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். ஆனால் டெல்லியில் நிலவும் பனிமூட்டம், பயணிகளின் பயணத்திட்டத்தினை தடுத்து நிறுத்தியுள்ளது.


டெல்லியின் இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் பனிகாலங்களில் விமானங்கள் தாமதமாவது, ரத்து செய்யப்படுவது வழக்கமான ஒன்றாகும். நேற்றைய தினம் 300மீ வரையில் காட்சி தன்மையினை இழந்திருந்த டெல்லி விமான நிலையம், இன்று மேலும் மோசமாகியுள்ளது.


விமான போக்குவரத்தை தவிற, ரயில் போக்குவரத்தினை பொறுத்தமட்டில் வழக்கம்போல் பல ரயில்கள் ரத்து செய்யப்பட்டுளது. இதுவரை சாலை போக்குவரத்தில் பனிமூட்டம் காரணமாக ஏற்பட்ட விபத்தில் சுமார் 50 பேர் பலியாகியுள்ளனர்.