மான் கி பாத்: மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உரிய நிவாரணம்!!
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும் என மோடி உறுதி!!
வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு தேவையான நிவாரணம் வழங்க மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும் என மோடி உறுதி!!
பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களுடன் வானொலி வாயிலாக மன் கீ பாத் என்ற தொடரில் நாட்டில் நடக்கும் பல்வேறு பிரச்சினைகளை சுட்டிக் காட்டி பிரதமர் மோடி வானொலியில் உரையாற்றுவார். இந்த உரை நிகழ்ச்சி அகில இந்திய வானொலி உட்பட அனைத்து வானொலிகளும் காலை 11 மணிக்கு ஒலிபரப்பு செய்யப்படும். இந்நிலையில், மக்களவை தேர்தல் வெற்றிக்கு பின்னர் பிரதமர் மோடி இன்று இரண்டாவது முறையாக வானொலியில் உரை நிகழ்த்தினார். இந்நிலையில், இன்று உரையாற்றிய மன் கி பாத் நிகழ்ச்சியில் பண்டிகை காலங்களில் நடக்கும் விழாக்கள் மூலம் தண்ணீர் சேகரிப்பு குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மோடி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் பேசுகையில்; எனது வேண்டுகோளின் படு, ஏராளமான மக்கள் பல புத்தகங்களை படித்து, அந்த அனுபங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர். புத்தகங்களை படிக்க எனக்கு நேரம் இல்லை. ஆனால், உங்கள் மூலமாக, பல புத்தகங்களில் உள்ள மையக்கருத்துகள் எனக்கு தெரியவந்துள்ளது என உறைய துவக்கினார்.
விண்வெளி துறையில் 2019 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு பலன் அளிக்கும் ஆண்டாக அமைந்துள்ளது. சந்திராயன் 2 விண்கலத்தை விஞ்ஞானிகள் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளனர். நிலவில் இந்த விண்கலம் தரையிறங்குவதை பார்க்க காத்திருக்கிறோம். இந்த விண்கலம் நமக்கு பல வகைகளில் சிறப்பானது. சந்திராயன் 2 விண்கலம் மூலம், நம்பிக்கை மற்றும் பயமின்மை என்ற இரண்டு பாடங்களை நான் கற்று கொண்டுள்ளேன். நமது திறமை மற்றும் தகுதி மீது நம்பிக்கை வைக்க வேண்டும். இந்தியாவின் விண்வெளி திட்டம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்த வினாடி வினா போட்டியில் பங்கேற்க வேண்டும் என மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். இதற்கான விவரங்கள் மை கவ் இந்தியா இணையதளத்தில் இடம்பெற்றிருக்கும்.
இதையடுத்து தண்ணீர் சேமிப்பு குறித்து கூறுகையில்; தண்ணீர் சேமிப்பு குறித்து மக்கள் அவர்களின் பாரம்பரிய முறைகளை என்னிடம் பகிர்ந்துள்ளனர். மீடியாக்கள், இதனை பெரிய இயக்கமாக நடத்தி வருகின்றன. தண்ணீர் சேமிப்புக்கு அரசுகளும், தொண்டு நிறுவனங்களும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். நாட்டில் முதல்முறையாக, தண்ணீர் கொள்கையை மேகாலாயா அரசு உருவாக்கியுள்ளது. இதற்காக மேகாலயா அரசிற்கு பாராட்டு தெரிவிக்கிறேன். அரியானாவில், குறைந்த நீரை பயன்படுத்தப்படும் பயிர்கள் நடவு செய்யப்படுகின்றன. இதன் மூலம் விவசாயிகளுக்கு இழப்பு குறைகிறது. பண்டிகை காலகட்டத்தில், பல விழாக்கள் நடக்கும் அப்போது நாம் தண்ணீர் சேமிப்பு குறித்த செய்தியை அனைவருக்கும் அனுப்ப ஏன் பயன்படுத்தக்கூடாது? இந்த விழாக்களின் போது, தண்ணீர் சேமிப்பு குறித்து தெரு நாடகங்கள் உட்பட பல வழிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும் என அவர் கூறினார்.
மேலும், கிராமங்களுக்கு திரும்புவோம் என்ற திட்டம் குறித்து காஷ்மீரை சேர்ந்த முகமது அஸ்லம் என்பவர் எனக்கு தகவல் அளித்தார். இதன்படி, கிராமங்களில் அதிகாரிகள் தங்கி அவர்களின் தேவையை நிறைவேற்றுவார்கள். இந்த திட்டத்தில், காஷ்மீர் மக்கள் அதிகளவு பங்கேற்றனர். இதன் மூலம் அவர்கள் நல்ல நிர்வாகத்தை விரும்புவது தெரியவந்துள்ளது. துப்பாக்கிகள், குண்டுகளை விட வளர்ச்சியில் அவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளனர் என கூறினார்.
கடுமையான மழை மற்றும் வெள்ளம் காரணமாக நாட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது மக்களுக்கு தேவையான நிவாரணம் மற்றும் உதவி வழங்க மாநில அரசுடன் இணைந்து மத்திய அரசு பணியாற்றும் என உறுதி அளிக்கிறேன்" என பிரதமர் தெரிவித்துள்ளார்.