காலநிலை மாற்றம் அல்லது நிலையான வளர்ச்சி என உலகளாவிய நிகழ்ச்சி நிரலை வடிவமைப்பதில் இந்தியா முன்பை விட இப்போது சிறந்த இடத்தில் உள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நரேந்திர மோடி நிர்வாகத்தின் இரண்டாவது பதவிக்காலத்தின் 100 நாட்கள் குறித்த செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அமைச்சர், இன்று பலதரப்பு கூட்டங்களில் இந்தியாவின் கருத்துக்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படுவதாகவும், ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் உலக அரங்கில் பல வழிகளில் பங்களிக்கும் பங்கைக் கொண்டுள்ளது என்றும் கூறினார்.


மேலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரும் இந்தியாவின் ஒரு பகுதியே அதனை நிச்சயமாக ஒருநாள் மீட்போம் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



தொடர்ந்து பேசிய அவர் "100 நாட்களில் இந்த அரசாங்கத்தின் மிகப்பெரிய சாதனையாக தேசப் பாதுகாப்பு இலக்குகளுக்கும் வெளியுறவு கொள்கைக்கும் இடையே ஒரு வலுவான தொடர்பு ஏற்படுத்தப்பட்டிருப்பதையே கூறுவேன். நமது அண்டை நாடு இயல்பான நிலைக்குத் திரும்பும்வரை நமக்கு அவர்களால் சவால் நீடித்துக் கொண்டே இருக்கும். எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை அவர்கள் நிறுத்த வேண்டும்.


பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவுடையது என்ற நமது நிலைப்பாட்டில் எப்போதுமே மாற்றம் இல்லை., அதனை ஒருநாள் நிச்சயமாக மீட்போம்.


இந்தியா - அமெரிக்கா இடையேயான நட்புறவு கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வளர்ச்சி கண்டுள்ளது" எனக் குறிப்பிட்டு பேசினார்.


தனது உரையின் போது ‘பலதரப்பு மன்றங்களில் பெரிய விவாதங்களில், இந்தியாவின் குரலும் பார்வையும் மிகத் தெளிவாகக் கேட்கப்படுகின்றன’ என குறிப்பிட்ட அவர், தேசிய, பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக தேசம் உள்நாட்டில் என்ன செய்கிறது என்பதற்கும், இராஜதந்திர அடிப்படையில் வெளிநாடுகளில் செய்யப்படுவதற்கும் வலுவான தொடர்பு இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் "உலகளாவிய திறன்கள், தொழில்நுட்பங்கள், சிறந்த நடைமுறைகள், வளங்கள் மற்றும் கூட்டாண்மைகளை பல வழிகளில் மேம்படுத்து தங்கள் ஆட்சி செயல்பட்டு வருகிறது" எனவும் குறிப்பிட்டார்.