இலங்கையின் கண்டி மாவட்டத்தில் நடைப்பெற்று வரும் பிரச்சணையை கட்டுப்படுத்த, இலங்கை அரசு 10 நாட்களுக்கு அவசரநிலை பிரகடனம் செய்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நேற்றைய தினம் இலங்கையில், சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் கண்டி திகன மற்றும் தெல்தெனிய பகுதியில் வன்முறை நிகழ்வுகள் தொடர்ந்ததை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமல்படுத்தப்பட்டிருந்தது. 


இந்நிலையில் தற்போது நாடு முழுவதும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷ நாயக்க தெரிவித்துள்ளார்.



இந்த தீர்மானமானது இலங்கை அதிபர் உடனான சந்திப்பின் போது எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி திஷ்ஷநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.