விடுதலை பெற்ற நூறாவது ஆண்டில் இந்தியப் பொருளாதாரம் எங்கே இருக்கும்? இந்தியாவின் துரித வளர்ச்சி!
Economic Strategy Of India: இந்தியா சுதந்திரம் அடைந்து நூறாண்டு நிறைவடையும்போது 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பது இந்தியாவின் இலக்கு...
2047ல் இந்தியாவின் பொருளாதார நிலைமை எப்படி இருக்கும்? இந்தியா 35 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாறிவிடும். 2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து நூறாண்டு நிறைவடையும்போது 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற வேண்டும் என்பது இந்தியாவின் இலக்காக இருக்கிறது.
இந்தியா சுமார் மூன்று தசாப்தங்களாவது 9-10% வளர்ச்சியை வருடாந்திர விகிதத்தில் வளர வேண்டும் மற்றும் தொடர்ந்து புதுமைகளை உருவாக்க வேண்டும் அப்போது தான் இது சாத்தியம் என்று நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறுகிறார். 2047-க்குள் 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்வது குறித்து பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
2047ல் இந்தியப் பொருளாதாரம்
உலகின் பெரிய பொருளாதாரங்களில் ஐந்தாவது இடத்தில் உள்ள இந்தியா, 2027 ஆம் ஆண்டில், ஜப்பான் மற்றும் ஜெர்மனியை முந்தும் என்றும், உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்றும் டெக் தொழில்முனைவோர்களின் நிகழ்வான 'மும்பை டெக் வீக்' (MTW) நிகழ்ச்சியில் பேசிய நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.
இந்தியாவில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசின் ஆட்சியில் பொருளாதார முன்னேற்றம் அடைந்திருக்கும் நிலையில், இந்தியாவின் அண்டை நாடுகள் மந்தநிலையை சந்தித்து வருகின்றன. இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான் இலங்கை, சீனா மட்டுமல்ல, உலகின் சக்தி வாய்ந்த நாடுகளும் தற்போது பொருளாதார சவால்களை எதிர்கொள்கின்றன.
2047ல் இந்தியா சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகள் நிறைவடைவதற்குள் 35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறும் என்ற இலக்கை நோக்கி பயணிப்பதாக அவர் தெரிவித்தார்.
மேலும் படிக்க | உலகின் பெரிய பொருளாதாரம்: சரிந்த ஜப்பான், முன்னேறிய ஜெர்மனி.. அப்போ இந்தியா?
அதாவது 2047ஆம் ஆண்டுக்குள் இந்தியா உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மாறும் என்று நிதி ஆயோக்கின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் கூறினார்.
ஸ்டார்ட்-அப்கள், விண்வெளி மற்றும் பல துறைகளை ஆதரிக்கும் அரசாங்கத்தின் கொள்கையை வெளியிடுவதால், இளம் தொழில்முனைவோர் செயற்கை நுண்ணறிவு, தளவாடங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற துறைகளில் கவனம் செலுத்த வேண்டும்.
35 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாறுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. நாம் தொடர்ந்து புதுமைகளை உருவாக்க வேண்டியிருக்கும். இந்தியா 1.4 பில்லியன் மக்களின் டிஜிட்டல் அடையாளத்தை உருவாக்கியுள்ளது என்றும் தொழில்நுட்ப ரீதியாக நாடு நிறைய முன்னேறியுள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவின் பொருளாதாரம் துரித கதியில் முன்னேறுகிறது என்றும், முதலீடு மற்றும் உள்நாட்டு தேவையின் அடிப்படையில் இந்தியாப் பொருளாதாரம் வலுப்பட்டுள்ளதாகவும் உலக வங்கி அண்மையில் வெளியிட்ட அறிக்கை கூறுகிறது. நடப்பு நிதியாண்டில் (2023-24) இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதமாக வளர்ச்சியடையலாம் என உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.
மேலும் படிக்க | ராக்கெட் வேகத்தில் இந்திய பொருளாதாரம்! பின்னுக்குச் செல்லும் சீனா! கடனில் தவிக்கும் அண்டை நாடுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ