ஹரியானாவில் வெட்டுக்கிளி தாக்குதல்: திரளாக  திரண்டு, வந்து பயிரை சேதப்படுத்துவதை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மீண்டும் மீண்டும் ஒரே வகையான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதை தவிர்க்க, தற்போதுள்ள பூச்சிக்கொல்லிகளுடன் கூடுதலாக 20,000 லிட்டர் லாம்டா சிஹலோத்ரின் சேமித்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.


புதுடெல்லி: ஜூலை 22 க்குப் பிறகு பல மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் தீவிரமாக  தாக்கக்கூடும் என்ற எச்சரிக்கையை கருத்தில் கொண்டு வெட்டுக்கிளி திரளாக திரண்டு வந்து  பயிர் சேதபபடுத்துவது கட்டுப்படுத்தும் முயற்சிகளை ஹரியானா அரசு முடுக்கிவிட்டுள்ளது.


ALSO READ | இரண்டாவது முறையாக சட்ட உதவியை பெற்றார் Kulbhushan Jadhav ..!!!


ஹரியாணா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சீவ் கவுஷல் கூறுகையில், கூடுதல் அளவிலான பூச்சிக்கொல்லிகளை சேமிக்க வியாழக்கிழமை, ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றார்.


இப்பகுதியில் உள்ள வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த  பொதுவாக பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லியான சோர்பிரிபோஸை Chorpyriphos, மருந்தினால், பெரிய அளவில் பலன் இல்லை என கூறினார்.


மீண்டும் மீண்டும் ஒரே விதமான பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்துவதால், அவை சிறந்த பலனை கொடுப்பதில்லை என்பதால்,Lamda Cyhalothrin என்னும் புச்சிக் கொல்லிகள் பெருமளவில் சேமித்து வைக்கப்பட்டுள்ளன.


மாநிலத்தில், வான்வழி மூலம் பூச்சிக்கொல்லியை  தெளிப்பதற்காக மூன்று ட்ரோன்கள் வாங்கப்படுகின்றன, என்றார் அவர்.


 டிராக்டர் பொருத்தப்பட்ட 3,540 ஸ்ப்ரே பம்புகள் மற்றும் 66 தீயணைப்பு கருவிகள் இதற்காக தயாராக வைக்கப்பட்டுள்ளதாக ஹரியாணா மாநில கூடுதல் தலைமைச் செயலாளர் சஞ்சீவ் கவுஷல் கூறினார்.


 மரங்கள் மீது பயன்படுத்துவதற்காக இங்கிலாந்தில் இருந்து  ஃபோகிங் இயந்திரங்களை, இதற்காக மத்திய அரசு வாங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.


ராஜஸ்தானின் ஜுன்ஜுனு மாவட்டத்தில் பெரிய அளவிலான வெட்டுக்கிளி இனப்பெருக்கம் காணப்பட்டதால், ஜூலை 22 க்குப் பிறகு நுஹ், ரேவாரி, மகேந்திரகர், பிவானி மற்றும் சர்கி தாத்ரி மாவட்டங்களில் அதிக தீவிரம் கொண்ட வெட்டுக்கிளிகள் தாக்குதல்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


ALSO READ | Amazon, Walmart நிறுவனக்களுக்கு சவாலாக உருவெடுக்கும் Reliance …!!!


 


ஜஜ்ஜர், சர்கி தாத்ரி, பல்வால், சிர்சா, நுஹ், ரேவாரி, பிவானி மற்றும் நர்னால் மாவட்டங்களில் ஜூன் 26 முதல் ஜூலை 16 வரை 13,038 ஏக்கர் பரப்பளவில் நடந்த தாக்குதல்களை விட இந்த தாக்குதல்கள் மிகவும் கடுமையானதாக இருக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது


ஜஜ்ஜர், பல்வால் மற்றும் நுஹ்  மாவட்டங்களில் உள்ள ஆகிய விவசாயிகள் வெட்டுக்கிளி தாக்குதல் காரணமாக இழப்பு ஏற்பட்டதாக  தெரிவிக்கவில்லை என்று கவுஷல் கூறினார்.


பெரும்பாலான மாவட்டங்களில், 5-10 சதவிகித பாதிப்பு தான் ஏற்பட்டுள்ளது என்றும், விரவாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக,  மிக மோசமான பாதிப்புக்குள்ளான ரேவாரி மற்றும் சிர்சா மாவட்டங்களில்  30 சதவீதத்திற்கும் அதிகமான இழப்புகளை சந்திக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.